Ad Space avaiable

(வீடியோ இணைப்பு) கட்டாரில் இஸ்ரேலிய எம்பஸி .. வைரலான செய்தியின் உண்மைத்தன்மை வெளியானது.


-தில்ஷான் முகம்மத்-

கட்டாரில் இஸ்ரேலிய எம்பஸி இருக்கிறது என்ற ஒரு செய்தியை ஆங்காங்கே காணக்கிடைத்தாலும் இதன் உண்மைத்தன்மை என்ன என்று ஆராய்ந்து பார்க்கணும் என்று சிலநேரம் நினைப்பதுண்டு. கட்டாரில் இருக்கும் நண்பர்களிடம் விசாரித்தால் அப்படி ஒன்னு கடல்லேயே இல்லியாம் என்று சொல்லிவிட்டு சிரிப்பார்கள்.

சரி !! இந்த வதந்தியை உருவாக்கியது யார் என்று தேடிப்பார்க்கணும் என்று நினைத்த எனக்கு விடைகிடைத்தது.

யார் என்றே அறிமுகம் இல்லாத ஒருவர் கட்டாரில் இஸ்ரேல் எம்பஸி இருக்கிறது என்று முதன்முதலாக 2011 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்கிறார். இந்த ட்வீட்டை அடிப்படையாக கொண்டே இந்த செய்தி ட்விட்டரில் அதிகம் பரப்பட்டிருக்கிறது. இதே நேரத்தில் , கட்டாரில் இருக்கும் வியட்னாம் எம்பஸிக்கான இணையத்தளம் என்று போலியாக ஒரு தளம் உருவாக்கப்பட்டு அந்த தளத்தில் கட்டாருக்கான இஸ்ரேலிய எம்பஸி என்று ஒரு போலி முகவரி கொடுக்கப்படுகிறது. ஆனாலும் வியட்னாம் என்பசிக்கானது என்று உருவாக்கப்பட்ட அந்த தளம் அமெரிக்காவின் அரிசோனாவில் இருந்து இயக்கப்படுகிறது. மண்டையை மறைக்க தெரிந்தவர்களுக்கு கொண்டையை மறைக்க தெரியவில்லையே. :D :D அவ்வளவுதான் இந்த கதை. (விரிவாக வீடியோவில் பார்க்கலாம்).

இதில் இன்னுமொரு சுவாரசியமாசியான விஷயம் இருக்கிறது. கட்டாரில் இஸ்ரேல் எம்பஸி இருப்பதை எமக்கு கண்டுபிடித்து தருபவர்களுக்கு 2 மில்லியன் டாலர் பணப்பரிசு தருகிறோம் என்று கட்டார் நாட்டு தனவந்தவந்தர்கள் பலர் சவால் விட்டிருக்கிறார்கள்.

2 மில்லியன் டாலர் என்றால் 30 கோடி ரூபாய் !! வாவ் !!

கட்டாரில் இஸ்ரேலிய எம்பசி இருப்பதை கண்டுபிடித்தவர்கள் உடனடியாக அதை அறிவித்து overnight இல் கோடிஸ்வரராகும் வாய்ப்பு இதோ உங்களுக்கு.

(வீடியோ இணைப்பு) கட்டாரில் இஸ்ரேலிய எம்பஸி .. வைரலான செய்தியின் உண்மைத்தன்மை வெளியானது. (வீடியோ இணைப்பு) கட்டாரில் இஸ்ரேலிய எம்பஸி .. வைரலான செய்தியின் உண்மைத்தன்மை வெளியானது. Reviewed by Madawala News on 7/06/2017 12:42:00 PM Rating: 5