Ad Space Available here

கட்டாருக்கு தேவையான உணவு பொருட்களை கப்பல் மூலம் ஏற்றுமதி செய்தது துருக்கி.


-Razana Manaf-
சவூதி அரேபிய கூட்டணி நாடுகள் கட்டார் மீது பொருளாதார தடை விதித்து ஒரு மாதம் முற்றுப்பெற்று விட்ட இந்த நிலையில் துருக்கி முதல் தடவையாக கட்டாருக்கு தேவையான உணவு பொருட்களை கப்பல் மூலம் ஏற்றுமதி செய்திருக்கின்றது.

துருக்கியின் இஸ்மீர் துறைமுகத்தில் இருந்து மூவாயிரம் மெற்றிக் தொன் உணவுப்பொருட்களை சுமந்த கப்பல் முதல் முறையாக கட்டாரின் ஹமாத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது, இதில் உலருணவுப்பொருட்கள், பழ வகைகள், மரக்கறி வகைகள் என்பன முக்கியமாக அடங்குகின்றன.

சவூதி அரேபிய கூட்டணி நாடுகள் கட்டார் மீது பொருளாதார தடை விதித்த நாள் முதல் துருக்கியே கட்டாருக்கு கை கொடுத்து உதவியவண்ணம் உள்ளது, இதுவரையிலும் நூறு விமானங்களில் உணவுப்பொருட்களை துருக்கி கட்டாருக்கு அனுப்பி வைத்திருக்கின்றது, இருந்த போதும் அவை சிறிய அளவிலான தொகை என்பதால் கட்டாருக்கு அது தன்னிறைவை கொடுத்து இருக்கவில்லை. முதல் தடவையாக இப்போது சரக்கு கப்பல் மூலம் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதானது கட்டாருக்கு சற்று ஆறுதலை அளித்திருக்கிறது.

கட்டாருக்கு அனுப்பப்படும்   இந்த உணவுக்கப்பல்களின் எண்ணிக்கை
தொடரும் நாட்களில்  அதிரிக்குமா என்கின்ற கேள்விக்கு பதில் அளிக்கப்படவில்லை இருந்தும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எதிர்வரும் வரும் நாட்களில் கட்டாருக்கான இரண்டாவது உணவுக்கப்பல் துருக்கியிலிருந்து அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், 2022ம் ஆண்டு கட்டாரில் நடைபெறவிருக்கும் உலககிண்ண கால்பந்தாட்ட போட்டிகளுக்கான மைதானங்களை அமைப்பதற்கான கட்டுமான பொருட்களை வழங்க சவூதி கூட்டணி நாடுகள் மறுத்திருக்கின்ற காரணத்தினால் அந்த பொருட்களையும் கட்டாருக்கு வழங்க துருக்கி முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்க விடயம்.

http://www.thepeninsulaqatar.com/article/05/07/2017/Qatar-receives-3000-tonnes-of-food-products-from-Turkey-through-Hamad-Port
கட்டாருக்கு தேவையான உணவு பொருட்களை கப்பல் மூலம் ஏற்றுமதி செய்தது துருக்கி. கட்டாருக்கு தேவையான உணவு பொருட்களை கப்பல் மூலம் ஏற்றுமதி செய்தது துருக்கி. Reviewed by Madawala News on 7/06/2017 02:09:00 PM Rating: 5