tg travels

கிழக்கு வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் மேலும் நீடிக்கப்படும். ஏறாவூரில் பிரதமர்.

கிழக்கு வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் சட்பூர்வமாக மேலும் நீடிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை ஏறாவூருக்கு விசேட விஜயம் மேற்கொண்டவேளை பிரதமர் இக்கருத்தினைக் கூறினார்.

கிழக்கு மாகாண ஆளுநர் றோஹித்த கோகொல்லாகம முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

முதலமைச்சரின் ஏறாவூர் வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

பிரதமர் இங்கு மேலும் கருத்துத் தெரிவ்pக்கையில்--பொதுவாக அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரேநாளில் நடாத்தவதானால் தற்போது ஆட்சிக்காலம் முடிவடையாதுள்ள மாகாண சபைகளின் முதலமைச்சர்களது ஒப்புதலுடன் கலைக்கவேண்டும். அவ்வாறான கட்டத்தில் மாத்திரமே அது சாத்தியமாகும். அல்லது தற்போது காலாவதியாகும் மாகாண சபைகளின் ஆட்சிக்காலத்தை நீடித்தால்  2019 ஆம் ஆண்டில் அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடாத்த முடியும் என்றார்.

இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருனாகரன் கருத்துத் தெரிவிக்கையில்-- மட்டக்களப்பு மாவட்டம் இருபெரும் வாவியினால் பிரிக்கப்பட்டு;ள்ளது. வாவிக்கு அப்பால் உள்ள படுவான்கரைப் பிரதேசம் கடந்த முப்பதுவருடகால போர்ச்சூழல் காரணமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை. 

இதனால் கிழக்கு மாகாண சபைக்கு அபிவிருத்திக்காக அதிக நிதியொதுக்கீடு செய்யப்படவேண்டும். குறிப்பாக படுவான்கரை பிரதேசத்திற்கான போக்குவரத்திற்கென 
வவுணதீவு, பட்டிப்பளை மற்றும் மண்டுர் ஆகிய பிரதேசங்களில் மாத்திரமே பாலங்கள் உள்ளன. படுவான்கரை பிரதேசத்தில் வாழும் ஓரிலட்சத்திற்கு மேற்பட்ட மக்களது போக்குவரத்திற்கு இப்பாலங்கள் போதாமல் உள்ளன. இதனால் குருமண்வெளி - மண்டுர், அம்பலாந்துறை குருமண்வெளி, மற்றும் கிரான் ஆகிய பிரதேசங்களிலும் பாலங்கள்; அமைக்கப்படவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

இங்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் கருத்துத் தெரிவிக்கையில் - மட்டக்களப்பு மாவட்டத்தில் தூர்ந்த நிலையிலுள்ள நீர்ப்பாசனக்குளங்களை புனரமைக்கும் பட்சத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதேபோன்று முப்பது வருடகால போர்ச்சூழலின் பின்னர் மீளக்குடியமரும் முஸ்லிம்கள் வன இலாகாவின் காணி சுவீகரிப்ப பிரகடனத்தினால் சொந்தக்காணிகளை இழக்கும் நிலை தவிர்க்கப்படவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

இக்கோரிக்கைகளை எழுத்துமூலம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரம சிங்க கூறினார்.

Journalist Nasser Sir fb.
கிழக்கு வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் மேலும் நீடிக்கப்படும். ஏறாவூரில் பிரதமர். கிழக்கு வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் மேலும் நீடிக்கப்படும். ஏறாவூரில் பிரதமர். Reviewed by Madawala News on 7/28/2017 09:17:00 PM Rating: 5