Kidny

Kidny

வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் கடத்தபட்ட சிறுமி துஷ்பிரயோகம். மற்றொரு சிறுமி தப்பினார். #மட்டக்களப்பு பிரதேசத்தில்..


மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் 13 வயது சிறுமியின் கழுத்தில் முகமூடி அணிந்த இளைஞர் ஒருவர் கத்தியை வைத்து மிரட்டி அவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய் துள்ளதுடன் 15 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த போது அவர் காப்பாற்றப் பட்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இது பற்றி தெரியவருவதாவது : வாழைச்சேனை வாகனேரி பிரதேசத் தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு ஆல ய உற்சவத்திற்கு சிறுமி அவரது சகோதரி அவரது கணவன் ஆகியோருடன் சென்று நள்ளிரவு வீடு திரும்பிய நிலையில் வீட்டின் கதவை பூட்டாது நித்திரைக்கு சென்றுள்ளனர்.

இந்தவேளை அதிகாலை 2 மணிய ளில் அந்த வீட்டிற்குள் முகத்தை மூடியவாறு இளைஞர் ஒருவர் புகுந்து சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரை பலாத்காரமாக தூக்கிக் கொண்டு வெளியே வந்த நிலையில் சிறுமியின் சகோதரி ஏதோ சத்தம் வருவதை கேட்டு நித்திரையிலிருந்து எழுந்த போது சகோதரியை இளைஞர் ஒருவர் தூக்கிக் கொண்டு ஓடுவதை
அவதானித்து சத்தமிட்டுள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் வந்து சிறுமியை தேடியபோது அருகில் உள்ள குளக்குட்டுப்பகுதியில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டார்இ.

இதேவேளை இந்த ஆலய உற்சவத் திற்கு சென்ற 15 வயது சிறுமியொ ருவரை அதிகாலை 1.30 மணியள வில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த போது அங்கிருந்த இளைஞர்கள் அச்சிறுமியை காப்பாற்றிய நிலையில் அந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளதுடன் அவருடன் சென்ற மாங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த நண்பனை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   இச்சம்பவங்கள் தொடர்பான விசார னைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் கடத்தபட்ட சிறுமி துஷ்பிரயோகம். மற்றொரு சிறுமி தப்பினார். #மட்டக்களப்பு பிரதேசத்தில்.. வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் கடத்தபட்ட சிறுமி  துஷ்பிரயோகம். மற்றொரு சிறுமி தப்பினார். #மட்டக்களப்பு பிரதேசத்தில்.. Reviewed by Madawala News on 7/24/2017 12:02:00 PM Rating: 5