Ad Space avaiable

பாகிஸ்தான் தீர்வை வதியை அதிகரித்ததால் பாதிக்கப்பட்ட இலங்கை உற்பத்தியாளர்களுக்காக பேச்சுவார்த்தை.

வெற்றிலையை இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்காகஅந்த நாடு இறக்குமதி
 வரியை மேலும் அதிகரித்துள்ளமையால் வெற்றிலை உற்பத்தியாளர்களுக்கு  ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்துகைத்தொழில் வர்த்தஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை(31.07.2017) பாகிஸ்தான் தூதுவர்அஹமட்கான் சிப்றாவிடம் எடுத்துரைத்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாஸ்ரீஜயசேகர தன்னுடன் தொடர்பு கொண்டுவெற்றிலை உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்ததாகவும்இந்த விடயத்தை பாகிஸ்தான் அரசாங்கம் சாதகமாக பரிசீலித்துவெற்றிலை ஏற்றுமதியாளர்களுக்கும்உற்பத்தியாளர்களுக்கும்  நன்மை பயக்கவேண்டுமென அமைச்சர் ரிஷாட்கேட்டுக்கொண்டார்

கடந்த ஜூலைமாதம் தொடக்கம் இவ்வாறான மேலதிக இறக்குமதி வரியை பாகிஸ்தான் அரசு அமுல் படுத்தியிருப்பதனால் வெற்றிலை உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திச்செலவைக்கூட ஈடு செய்யமுடியாத நிலைஏற்பட்டுள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்

இலங்கையில் வடமேல்மாகாணத்தில் புத்தளம்குருணாகல் போன்ற மாவட்டங்களிலேயே வெற்றிலை உற்பத்தி பெருமளவில் இடம் பெறுவதாக தெரிவித்த அமைச்சர்இலங்கையானது பாகிஸ்தானுக்கு மட்டுமே வெற்றிலையை ஏற்றுமதி செய்வதாகவும் தெரிவித்தார்

1கிலோ கிராம் வெற்றிலைக்கு பாகிஸ்தான்ரூபாவில் 200 (இலங்கையின் 291ரூபா)  மேலதிகவரி அறவிடப்படுவதாகசுட்டிக்காட்டிய அமைச்சர் ரிஷாட், இந்தவிடயத்தை பாகிஸ்தான் அரசு மீள்பரிசீலனைசெய்து வெற்றிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இவற்றைக் கேட்டறிந்துகொண்ட பாகிஸ்தான்பதில் தூதுவர்இந்த விவகாரம் தொடர்பாகபாகிஸ்தான் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்காத்திரமான முடிவொன்றைபெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்

2013ம் ஆண்டு 10.05 மில்லியன் டொலரும், 2016ம் ஆண்டு 7.38 மில்லியன் டொலரும், 2017ம் ஆண்டு முதல் அரைக்காலாண்டுபகுதியில் 10 மில்லியன் டொலரும் வெற்றிலைஏற்றுமதியால் இலங்கைக்கு வருமானம் கிடைத்துள்ளதாக இங்குசுட்டிக்காட்டப்பட்டது

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கராச்சியில்நடைபெறவுள்ள இலங்கை - பாகிஸ்தான்கூட்டுப் பொருளாதார  ஆணைக்குழுவின்மாநாடு தொடர்பிலும் இங்குசிலாகிக்கப்பட்டதுஇரண்டு நாடுகளுக்குமிடையிலான ஏற்றுமதிஇறக்குமதி தொடர்பான சிக்கல்கள் குறித்துஇந்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆராய்ந்துதீர்வுகாண முடியும் எனவும் கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் தீர்வை வதியை அதிகரித்ததால் பாதிக்கப்பட்ட இலங்கை உற்பத்தியாளர்களுக்காக பேச்சுவார்த்தை. பாகிஸ்தான் தீர்வை வதியை அதிகரித்ததால் பாதிக்கப்பட்ட இலங்கை உற்பத்தியாளர்களுக்காக பேச்சுவார்த்தை. Reviewed by Madawala News on 7/31/2017 04:47:00 PM Rating: 5