Ad Space avaiable

போலிஸ் ரிப்போர்ட் | போதைப்பொருள்கலந்த இனிப்பைக் கொடுத்து யுவதியை துஷ்பிரயோகம் செய்த முதலாளி கைது #வரகாபொல.


வரக்காபொல நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் யுவதி ஒருவரை குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தமக்கு முறைப்பா டொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக மீரி கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட 20 வயதான யுவதி கடந்த 2 வருடங்களாக மேற்படி வர்த்தக நிலையத்தில் பணியாற்றி வருபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவ ருவதாவது,

கடந்த 26 ஆம் இவ்வர்த்தக நிலையத்தின் ஊழியர்கள் இரவு நேரம்  பணியாற்றியிருந்தமையினால் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் அவரது சொந்த வாகனத்தில் ஊழியர்கள் அனைவரையும் தத்தமது வீடுகளுக்கு கொண்டு சேர்த்துள்ளார்.

 அனைத்து ஊழியர்களையும் வீடுகளில் சேர்த்த பின்னர் 20 வயதான மேற்படி யுவதி மாத்திரம் இறுதியாக வாகனத்தில் இருந்துள்ளார்.

அதன்போது சந்தேக நபரான வர்த்தக நிலைய உரிமையாளர் மீரிகம ஹெலகம பிரதேசத்தின் 54 ஆவது கிலோமீற்றர் கல்லுக்கு அருகில் வாகனத்தை நிறுத்தியதோடு யுவதியின் அருகில் சென்று அமர்ந்துள்ளார்.

பின்னர் போதை ஏற்படுத்தக் கூடிய இனிப்பு வகை ஒன்றை யுவதிக்கு வழங்கி அவரை போதை நிலைக்கு இட்டுச்சென்று சந்தேக நபர் வன்புணர்ந்துள் ளதாகவும் இது குறித்து எவரிடமாவது தெரிவித்தால் கொன்று விடுவதாகவும் அந்த யுவதியை அவர் மிரட்டியுள்ளதா கவும் விசாரணைகளில் தெரியவந்துள்ள தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட யுவதி சம்பவம் தொடர்பில் அவரது நண்பியொ ருவரிடம் தெரிவித்ததுடன் அவருடன் சென்று மீரிகம பொலிஸ் நிலையத்தில் சந் தேகநபர் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர் பில் மீரிகம பொலிஸார் மேலதிக விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போலிஸ் ரிப்போர்ட் | போதைப்பொருள்கலந்த இனிப்பைக் கொடுத்து யுவதியை துஷ்பிரயோகம் செய்த முதலாளி கைது #வரகாபொல. போலிஸ் ரிப்போர்ட் | போதைப்பொருள்கலந்த இனிப்பைக் கொடுத்து யுவதியை துஷ்பிரயோகம் செய்த முதலாளி கைது #வரகாபொல. Reviewed by Madawala News on 7/31/2017 04:35:00 PM Rating: 5