Ad Space Available here

உண்மையை சரிவர கூறாவிட்டால் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற சர்ச்சைகளும், குழப்ப நிலைமையும் தோன்றலாம்.


-நாச்சியாதீவு பர்வீன்-

தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது வெறெந்தச்  சிறுபான்மை  கட்சிகளோ அரசியலமைப்பில்  பௌத்த சமயத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை இல்லாமலாக்குமாறு  கோரவில்லை என   பொறுப்புணர்ச்சியுடன்   குறிப்பிடுவதாக கூறிய  ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,  ஏனைய சமயங்களை பின்பற்றுவதற்கு பாதகமான அம்சங்கள் அதில் இடம்பெறக்கூடாது; அநீதி இழைக்கப்பட கூடாது  எனவும்  வலியுறுத்தப்படுவதாகவும் ,  அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் ஒர் உப சரத்தை உள்ளடக்குமாறு ஒருசாரார் முன்மொழிவதில்  எந்தத் தவறையும் காணமுடியாது  என்றும் சொன்னார்.

இப்பொழுது இந்த நாட்டின் சங்கைக்குரிய  மகாநாயக்க தேரர்கள் நால்வரும் புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென அரசாங்கத்திற்கு ஓர் அறிவித்தலை விடுத்துள்ளார்கள். அதில் பௌத்த மதத்திற்குரிய  உயரிய முக்கியத்துவத்தை குறைப்பதற்கு   எத்தனிக்கப்படுவதாக முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது அறவே அடிப்படையில்லாத குற்றச்சாட்டாகும். அவ்வாறான எந்த முன்னெடுப்பும் அரசியல் வழிகாட்டல் குழுவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்விமானும், பாராளுமன்றத்தின் முன்னாள் முதுநிலை சமகால உரை பெயர்ப்பாளருமான எம்.எம். ராஸிக் எழுதிய “ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு: சமூகவியல் நோக்கு” நூல் வெளியீட்டு விழா  சனிக்கிழமை (08) ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரியில் நடைபெற்றபோது . அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே   அவர்  இவ்வாறு கூறினார்.

அங்கு உரையாற்றும் போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

கூட்டு எதிர்க்கட்சியினர் அரசியலயலமைப்பை தொடர்புபடுத்தி நிலைமையை சிக்கலாக்க முயற்சிக்கிறார்கள்.இவ்வாறான நிலைமையில் நாங்கள் உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.
உண்மையை சரிவர கூறாவிட்டால் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற சர்ச்சைகளும், குழப்ப நிலைமையும் தோன்றலாம்.

 அத்துடன், முஸ்லிம் தலைமைகள் சுய தணிக்கையுடன் பேச வேண்டிய இக்கட்டான காலமிது, நாங்களே எங்களுக்குள் இந்த கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்
 ஏனென்றால், எங்களது வாய்களிலிருந்து தப்பித்தவறி ஏதாவது வெளியாகினால் அதனை  திரிபுபடுத்தி அதற்க்கு வெவ்வேறு அர்த்தங்களை கற்பித்து குழப்பத்தை  ஏற்படுத்த சிலகுழுக்கள் தயாராக இருக்கின்றன.

பாராளுமன்ற உரைபெயர்ப்பு என்பது ஒரு இலகுவான காரியமில்லை. அதற்கான ஆழ்ந்த அறிவும் மொழிப்புலமையும் அவசியமாகும். அந்தவகையில் இவரின் பாராளுமன்ற உரைபெயர்ப்பு என்பது மிகவும் பெறுமதிமிக்க செயற்பாடாகும்.அவர் அதனை வெற்றிகரமாக செய்து முடித்தார் என்பது அனைவரும் அறிந்த  விடயமாகும்.

இந்த  ஆய்வு நூலானது விசேடமாக இந்த பிரதேசத்தின் நீண்ட வரலாறு தொடர்பாக காத்திரமான பல தகவல்களை கொண்டிருக்கிறது. அவற்றை  தேடிப்பெறுவதில் இவர் கடினமாக உழைத்திருப்பது புலனாகின்றது.ஹெம்மாதகமயில் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் குடியேறியதிலிருந்து அங்கு ஏற்பட்ட  கல்வி, பொருளாதாரம் மற்றும்  வாழ்வியல் பற்றி இந்நூலில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

 நான் அறிந்த வகையில்  இந்த கிராமத்திற்கு பல  விசேட அம்சம்கள் இருக்கின்றன . ஏனென்றால்  எனது பாட்டனார் 1928 ஆம் ஆண்டு இந்தப்பாடசாலையில்  ஆசிரியராக கடமையாற்றியதை  இங்கு பலர் சுட்டிக்காட்டினர். அந்தக்காலம்  தொடக்கம் இந்த கிராமம் தொடர்பான பல விடயங்களை நான் அறிந்து வைத்திருக்கிறேன், அவற்றில் இந்த கிராமத்தவர்கள் பரம்பரையாக  பாரம்பரிய  வைத்தியத்துறையில் கைதேர்ந்தவர்கள் என்ற விடயம் மிகமுக்கியமானது.

இந்த நூலாசிரியரின் பாட்டனாரும்  பாரம்பரிய  வைத்தியர் என இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறே இங்கே அமர்ந்து இருக்கின்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன்  வைத்திய முதியான்சலாகே கெதர என்.எம். அமீன் என்ற பெயரினைக்கொண்டவர்.இதன் மூலம் வீட்டின் பெயரானது  வைத்திய முதியான்சலாகே கெதர என்று அழைக்கப்படுகிறது. நானும்  நாகஹ தெனியே கெதர என்ற வம்சப்பெயரைக் கொண்டவன்.

எமது பூர்வீகம் இவ்வாறு இருக்க, வரலாற்றைத்தெரியாதவர்கள் இப்பொழுது எமது சமூகத்தின் மீதுள்ள  காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உண்மைகளை மூடிமறைத்து,அவற்றை திரிபு படுத்தி ஏதேதோ வியாக்கியானங்களை செய்து திண்டாக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப்பின்னணியில் இவ்வாறு அங்கலாய்த்துக் கொண்டிருப்பவர்கள் பொதுவாக அரசியலமைப்பு சீர்த்திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பு என்று வரும்பொழுது அவற்றை  குழப்பியடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றார்கள்.அதனை எங்களால் தடுக்க முடியாது. இவ்வாறான நிலைமை ஏனைய சில நாடுகளிலும் காணப்படுகின்றன.

இவாறான சூழ்நிலையில் நாங்கள் கதைக்கின்ற போது மிகவும்  நிதானமாக  நடந்து கொள்ள வேண்டும்.  இப்பொழுது பாராளுமன்றத்தை பொறுத்தவரை அரசியலமைப்பு  சம்பந்தமாக தளம்பல் நிலை தலைதூக்கியுள்ளது.அரசியலமைப்பு க்கு ஒரு வழிகாட்டல் குழு உள்ளது. அதற்க்கு பிரதமர் தலைமை தாங்குகின்றார். அதிலொரு உறுப்பினராக நானும் இருக்கிறேன்.

கூட்டு எதிர்க்கட்சியினர் அரசியலயலமைப்பை தொடர்புபடுத்தி நிலைமையை சிக்கலாக்க முயற்சிக்கிறார்கள்.இவ்வாறான நிலைமையில் நாங்கள் உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.
உண்மையை சரிவர கூறாவிட்டால் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற சர்ச்சைகளும், குழப்ப நிலைமையும் தோன்றலாம்.

இப்பொழுது இந்த நாட்டின் சங்கைக்குரிய  மகாநாயக்க தேரர்கள் நால்வரும் புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென அரசாங்கத்திற்கு ஓர் அறிவித்தலை விடுத்துள்ளார்கள். அதில் பௌத்த மதத்திற்குரிய  உயரிய முக்கியத்துவத்தை குறைப்பதற்கு   எத்தனிக்கப்படுவதாக முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது அறவே அடிப்படையில்லாத குற்றச்சாட்டாகும். அவ்வாறான எந்த முன்னெடுப்பும் அரசியல் வழிகாட்டல் குழுவில் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது வெறெந்தக் சிறுபான்மை  கட்சிகளோ பௌத்த சமயத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை இல்லாமலாக்குமாறு  கோரவில்லை என்பதை நான் இங்கு மிகவும் பொறுப்புணர்ச்சியுடன்  குறிப்பிடுகிறேன்.ஆனால் ஏனைய சமயங்களை பின்பற்றுவதற்கு பாதகமான அம்சங்கள் இடம்பெறக்கூடாது; அநீதி இழைக்கப்பட கூடாது  என வலியுறுத்தப்படுகின்றது. அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் ஒர் உப சரத்தை உள்ளடக்குமாறு ஒருசாரார் முன்மொழிகின்றனர். அதில் நாங்கள் எந்தத் தவறையும் காணவில்லை.

இந்நிகழ்வில், விசேட அதிதியாக அமைச்சர் எம்.எச்.ஏ. கபீர் ஹாசிம் கலந்துகொண்டதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் மற்றும் ஊர் பிரமுகர்கள் உட்பட பலர் பங்குபற்றினர்.
உண்மையை சரிவர கூறாவிட்டால் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற சர்ச்சைகளும், குழப்ப நிலைமையும் தோன்றலாம். உண்மையை சரிவர கூறாவிட்டால் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற சர்ச்சைகளும், குழப்ப நிலைமையும் தோன்றலாம். Reviewed by Madawala News on 7/10/2017 06:50:00 PM Rating: 5