Ad Space avaiable

தாய், மகள், பேத்தி... நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­த சம்பவத்தின் விபரம்.


ஊவா­ப­ர­ண­கம பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மொர­கொல்ல பிர­தே­சத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்ட  ஒரே குடும்­பத்தை சேர்ந்த சிறுமி உட்­பட மூவர் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்­ள­தாக வெலி­மடை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.


வெலி­மடை மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தை அண்­மித்­த­தாக காணப்­படும் உமா ஓயாவில் நேற்று முற்­பகல் நீராடச் சென்ற ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த 81 வயதான தாய், 32 வயதான மகள் மற்றும் மகளின் பிள்ளை ஆகிய மூவ­ருமே இவ்­வாறு நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­யவந்­துள்­ளது.

இந்­நி­லையில் பிற்­பகல் 1 மணி­ய­ளவில் அப்­ப­கு­திக்கு நீராடச் சென்ற நப­ரொ­ருவர், மேற்­படி  மூவரும் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­தி­ருந்­ததைக் கண்டு வெலி­மடை பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கி­யி­ருந்தார்.


வெலி­மடை மொர­கொல்ல பிர­தே­சத்தை சேர்ந்த  கருப்­பையா புஷ்­ப­வதி (32),  கதி­ராயி (81) மற்றும் இரண்­டரை வய­தான தங்­க­ராஜா லெனினி என்ற சிறுமி ஆகிய மூவ­ருமே இவ்­வாறு சம்­ப­வத்தில் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.


நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்கள் மீட்­கப்­பட்டு நீதிவான் பரி­சோ­த­னை­களின் பின்னர் பிரேத பரி­சோ­த­னை­க­ளுக்­காக வெலி­மடை ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்து செல்லப்பட்டன. இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வரு கின்றனர்.
தாய், மகள், பேத்தி... நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­த சம்பவத்தின் விபரம். தாய், மகள், பேத்தி... நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­த சம்பவத்தின் விபரம். Reviewed by Madawala News on 7/13/2017 12:30:00 PM Rating: 5