Ad Space avaiable

ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற முக்கிய பத்து சம்பவங்கள் : சாகல தலைமையில் தீவிர விசாரணை.


முக்கிய பத்து சம்பவங்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் பொலிஸார் அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் காலத் தில் இடம்பெற்ற முக்கிய பத்து சம்பவங்களின் விசார னைகளில் ஏற்பட்டுள்ள தடங் கல்களை நீக்கி இந்த விசார ணைகளை துரிதப்படுத்தவும் ,இச்சம்பவங்களுக்குப் பின்னா லுள்ள முக்கிய அதிகாரிகளைக் கைது செய்யவும் நடவடிக்கை களை துரிதப்படுத்தியுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரக்பி வீரர் வசிம் தாஜுதீன் படுகொலை,
பிர பல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொ லை,
ராஜபக்ஷவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்திகளில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்த விசா ரணைகளே துரிதப்படுத்தப்ப டவுள்ளன.

இந்த விசாரணைகளில் சில அரசியல் வாதிகள் தலையிடுவ தாகவும் , இவ்வாறான தலையீ டுகள் சில அதிகாரிகளை கைது செய்வதில் பொலிஸாருக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதா கவும் பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தது.

இதையடுத்து சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க வின் நேரடிக் கண்காணிப்பில் இந்த விசாரணைகளை முன் னெடுப்பதென தீர்மானிக்கப்
பட்டுள்ளது.

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் தசாநாயக்க,சி
ரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க ஆகி யோரின் கைதுகள் பணத்துக் காக ஆட்களை கடத்திய சம்பவங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன.இந்நி லையில் மேலும் பல அதிகாரி களை கைது செய்யும் நிலை ஏற் பட்டுள்ளது.

எனினும் சில தலையீடுகள் விசாரணைகளை மந்தகதியில் நகர்த்தியுள்ளதுடன்,கைதுகளை யும் தாமதப்படுத்தியுள்ளன.


ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற முக்கிய பத்து சம்பவங்கள் : சாகல தலைமையில் தீவிர விசாரணை. ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற முக்கிய பத்து சம்பவங்கள் : சாகல தலைமையில் தீவிர விசாரணை. Reviewed by Madawala News on 7/24/2017 10:45:00 AM Rating: 5