Kidny

Kidny

டெங்குவால் அதிபர் - ஆசிரியை தம்பதியின் புதல்வன் சல்மான் அஹ்மட் மரணம்.


புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன் தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

புத்தளம் நாகவில் எருக்கலம் பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலை பிரதி அதிபர் எஸ். எம்.ஹு மற்றும் தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலய ஆசிரியை எச்.மஹீசா ஆகியோரின் புதல்வரான சல்மான் அஹ்மட் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் கடந்த இரண்டு வாரங்களாக காய்ச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச் சைக்காக குருநாகல் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இரண்டு வாரங்களாக குருநாகல் வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வந்த நிலையி லேயே நேற்றுமுன்தினம் செவ் வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கற்ற குறித்த மாணவன் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 8ஏ, 1பி தரச் சித்தியை பெற்றதுடன், புத்தளம் விஞ்ஞான கல்லூரியில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.


டெங்குவால் அதிபர் - ஆசிரியை தம்பதியின் புதல்வன் சல்மான் அஹ்மட் மரணம். டெங்குவால் அதிபர் - ஆசிரியை தம்பதியின் புதல்வன் சல்மான் அஹ்மட் மரணம். Reviewed by Madawala News on 7/27/2017 10:08:00 AM Rating: 5