Ad Space avaiable

கிண்ணியா உப்பு உற்பத்தியாளர்கள், கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சிடம் ஒரு உருக்கமான வேண்டுகோள்.



கச்சக்கொடிதீவு, முனைச்சேனை. அரை ஏக்கர் போன்ற இடங்களில் தற்போது உப்பு உற்பத்தி செய்கை பண்ணப்பட்டுள்ளது. 


இதில் அடிமட்ட ஏழைகளே ஈடுபட்டுள்ளனர். 

ஆனாலும் இவர்கள் உற்பத்தி செய்யும் உப்புக்கு சிறந்த விலை வாசி இல்லாததால் பெரும் கஷ்டத்தை எதிர் நோக்குகின்றார்கள். 

உப்பு செய்கை என்பது தன் ரத்தத்தை ரணமாக மாற்றியே செய்கை பண்ணப்படுகின்றன.

 கடும் கஷ்டமாணதொறு தொழில். நாம் நினைப்பது போன்று அவ்வளவு இலகுவான தொழில் அல்ல. 

இத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அடிக்கடி நோய் ஏற்படும் சந்தர்ப்பம் கூடுதலாகவே காணப்படுகிறது. ...

கடும் கஷ்டங்களுக்கு மத்தியில் உற்பத்தி செய்யப்படும் உப்பை  முறையான விற்பனை செய்ய முடியாத நிலையில். இருக்கும் இவர்களுக்கு அரசாங்கமோ. வேறு தனியார் நிறுவணமோ எவ்விதமான உதவிகளும் இதுவரையிலும் செய்யவில்லை.

 உப்பு உற்பத்தி செய்யும் செய்கையாளர்களை விட அதை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் அதிகமாக லாபம் ஈட்டுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 இந்த ஏழை தொழிலாளர்களுக்கு ஏதாவது அரசாங்கம் உதவிகளை செய்தால் இவர்களின் வாழ்வாதரத்தை உயர்த்தலாம். இது சம்பந்தமாக நமது அரசியல் வாதிகள் கூட எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பெரிதும் கவலையாகவுள்ளது .

கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் கெளரவ ரிசார்ட் பதூர்தீன் அமைச்சர் அவர்களே இது சம்பந்தமாக தாங்களின் மேலான  கவனத்திற்கு  கொண்டு வருகின்றோம். 

இவர்களின் வாழ்வுக்கு ஓளியுட்ட தாங்கள் அமைச்சு ஊடாக ஏதாவது உதவிகளை இவர்களுக்கு செய்ய முடியுமா? 

எதிர் பார்ப்புடன் காத்திருக்கும் ஏழை உப்பு உற்பத்தியாளர்கள் .அமைச்சர்  ரிஷாத்   அவர்களின் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சிடம் இருந்து இது தொடர்பில் உதவிகளை ,   சாதகமான   பதிலை  எதிர்பார்க்கின்றனர்.

Report By: முகம்மத் ஹிஷாம் -
கிண்ணியா உப்பு உற்பத்தியாளர்கள், கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சிடம் ஒரு உருக்கமான வேண்டுகோள். கிண்ணியா உப்பு உற்பத்தியாளர்கள், கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சிடம் ஒரு உருக்கமான வேண்டுகோள். Reviewed by Madawala News on 7/11/2017 10:31:00 AM Rating: 5