Ad Space Available here

இலங்கை சில வருடங்களில் சிங்கபூராகவோ, துபாயாகவோ அல்லது மலேசியாகவோ வளர்ச்சி அடையமுடியும் .


சவூதி அரேபிய முன்னணி முதலிட்டாளரான இளவரசர் முக்ரின் பின் அப்துல் அசிஸ் அல் சவூத் நான்கு
நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

இலங்கையில் மூன்று தசாப்த காலம் நீடித்த யுத்தம் முடிவுற்ற பின்னர் நாட்டில் அமைதி சமாதான சூழல் நிலவுகின்றது. சகல துறைகளிலும் முன்னேற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன. பயங்கரவாத அச்சுறுத்தல் அற்ற பாதுகாப்பான சூழலும் இங்கு காணப்படுகின்றது.


இந்தப் பின்புலத்தில் இலங்கை யில் முதலீடுகளையும், வர்த்தக
நடவடிக்கைகளையும் மேற் கொள் வதற்கான சூழல் மற்றும் வாய்ப்பு
கள் குறித்து ஆராய்வதற்காக இவர் முதன் முறையாக இவ்விஜயத்தை
மேற்கொண்டார்.

இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன, வெளி விவகார அமைச் சர் ரவி கருணாநாயக்கா, பொரு ளாதார மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக விவகார அமைச்
சர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்டோரை  நல்லெண்ண அடிப்படையில்
சந்தித்து பேச்சுவார்த்தைகளையும் அவரும் அவர் தலைமையிலான குழுவினரும் நடாத்தினர்.

அத்தோடு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடிக் கும் இவர்கள் சென்று திரும்பினர். இலங்கைக்கான விஜயமும், இங்கு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளும் சந்திப்புகளும் மிகவும் திருப்திகர மானதாகவும் நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் அமைந்திருந்ததாக இளவரசர் தெரிவித்திருக்கின்றார்.

அந்த வகையில் இளவரசர் முக்ரீன் பின் அப்துல் அஸிஸின் அல்
சவூத்தின் ஆலோசகர் முஹம்மத் அத்தான் சமன் நூதி தினகரன் நாளிதழுக்குக்கு அளித்த விஷேட பேட்டியை இங்கு தருகின்றோம்.


கேள்வி: இலங்கைக்கான உங்கள் விஜயம் மற்றும் அதன் நோக்கம் குறித்து குறிப்பிட முடியுமா?

 பதில்: இலங்கையில் முதலீ டுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் தான் நாம் இங்கு விஜயம் செய்துள்ளோம். அதற்கேற்ப இந் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி எவ்வாறு வளர்ச்சி அடைந்து வரு கின்றது.

அரசியல், பொருளா தார நிலைமை எவ்வாறு உள்ளது என்பன தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த அடிப்ப டையில் இங்கு முதலீடுகளையும் வர்த்தக நடவடிக்கைகளையும் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்த்துள் ளோம்.

எமது இவ்விஜயத்தின் மூலம் இங்கு எல்லாத் துறைகளிலும் முன் னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அவதானித்தோம்.

குறிப்பாக இங்கு வருடாவருடம் நல்ல முன்னேற்றங் கள் ஏற்பட்டு வருகின்றன. அவை நல்ல உக்கம் மிக்க சமிங்ஞையாக விளங்குகின்றது. அரசியல், பொரு ளாதார துறைகளில் எற்பட்டுவரும் இம்முன்னேற்றங்கள் நம்பிக்கை தரக் கூடியவகையிலும், புதிய சிந்த னைகளை உருவாக்கக் கூடியவகை யிலும் அமைந்திருக்கின்றன.

அதனால், இலங்கை அரசாங்கத் துடனும், இலங்கை மக்களுடனும் நாம் நல்லுறவை மேலும் வளர்க்க விரும்புகின்றோம். இலங்கையில் எமக்கு கிடைக்கப் பெற்ற உபசரிப் புக்கள் சில நேரம் அரபு நாடுகளில் கூட கிடைக்கப் பெறாதவையாகும்.

குறிப்பாக இந்நாட்டு ஜனாதிபதி முதல் எல்லா மட்டங்களிலுமே இந்த உபசரிப்புகள் கிடைக்கப் பெற்றன. இவை எதிர்காலத்தில் இலங்கையில் எமது முதலீடுகளை மேற்கொள்வதற்கு நம்பிக்கை தரக் கூடியவகையில் அமைந்துள்ளன.

எமது நாட்டில் விஷன் 2020, விஷன் 2030 என்ற இரு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இத் திட்டங்களின் ஊடாக சவூதி அரே பியாவை பொருளாதாரத் துறையில் முன்னேற்ற எதிர்பார்க்கப்பட்டுள் ளது.

இது மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோ அரசியல் நோக்காக்கும். அத்தோடு சவூதி அரேபியாவில் முதலீடு செய்ய இது நல்ல வகிபாகமும் கூட இப்போது சவூதி அரேபி யாவில் முதலீடு செய்வதற்கு ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.
நாம் அயல் நாடுகளடனும் ஏனைய சமயங்களைக் கொண்ட நாடுகளுடனும் மிகவும் சிறந்த நல் லறவை பேணவே விரும்புகின் றோம்.

நாம் இஸ்லாமியநாடாஎன்று பார்த்து உறவைக் கட்டியெழுப்ப விரும்பவில்லை. மாறாக மனி தாபிமான அடிப்படையில் தான் ஏனையவர்களுடன் நல்லுறவுகளை வளர்க்க எதிர்பார்க்கின்றோம். இது தான் எமது மன்னரதும், இளவரசர தும், நாட்டினதும் நோக்கமாகும்.


மன்னரும், இளவரசரும் மன்னரது குடும்பத்தினரும் மனிதாபிமான அடிப்படையில் தான் முழு உலகு டன் உறவுகளை மேற்கொண்டுள்ளனர்.


கேள்வி: இளவரசர், இலங்கை ஜனாதிபதி உட்பட இந்நாட்டின் அரசியல் முக்கியஸ்தரைகளை சந் தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தினரே?

பதில் : முதலில் ஒன்றைத் தெளி வாகக் கூறிக்கொள்ள வேண்டும். இந்நாட்டின் ஜனாதிபதி முழு மையான ஆசீர்வாத்ததை எமக்கு வழங்கினார். அத்தோடு அமைச்சர் களுடனான சந்திப்பும் நம்பிக்கை அளிக்கக் கூடியவகையில் அமைந் திருந்தன.

இந்த சந்திப்புக்களின் போது இருநாடுகளுக் கிடையிலும் நிலவும் நேரடி நல்லுறவை மேலும் எவ்வாறு மேம்படுத்த முடியும் எனபது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டன. அத்தோடு சவூதி அரேபியாவின் நேரடி முதலீடுகளை அதிகளவில் இலங்கைக்கு கொண்டு வருவது குறித்தும் அதிகம் கவனம் செலுத்தினோம்.


இலங்கையில் பெளத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என எல்லா இன, மத மக்களும் ஒற்றுமையாக வாழுகின் றனர். இது ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரி மிக்கவையாக உள்ளன. இது நாட்டில் விமோசனமும் சுபீட் சமும் ஏற்படப் பக்க துணையாக அமையும். ஆனால் அரபு நாடுக ளில் ஒரு சமயம் காணப்பட்டாலும் அங்கு பிரிவினைகளும் முரண்பா டுகளும் உள்ளன. அவ்வாறான நிலைமை இங்கில்லை.

இங்கு அரசியல் பொருளாதார துறைகளில்எற்பட்டுவரும்
முன்னேற்றங்கள்நம்பிக்கை தரக்கூடியவகையிலும்
தரக்கூடியவகையிலும் சிந்தனைகளைஉருவாக்கக்கூடிய
வகையிலும்அமைந்திருக்கின்றன.

கல்வி, உல்லாசத்துறை, கட்டட நீர்மாணத்திலும் முதலீடு செய்ய ஆர்வம்

கேள்வி; எவ்வாறானதுறைகளில் முதலீடு செய்ய எதிர்பார்க்கின் றீர்கள்?

பதில்: இது எமது முதலாவது விஜயமாகும். இந்த விஜயத்திலேயே எந்தெந்தத் துறையில் முதலீடு செய் வதென்று இன்னும் முடிவு செய்ய வில்லை. ஆனால் பலவகையான கைத்தொழில்களில் முதலிட ஊக் குவிப்புக்களைச் செய்ய முடியும். இருப்பினும் முதலீடு செய்வதற் கான வாய்ப்புகள் தொடர்பில் மேலும் மேலும் ஆராய்ந்து முடிவு களை எடுப்போம். இங்கு பொருளா தாரம் உறுதியாக உள்ளாக உள்ளது.

அதனால் உல்லாசப் பயணத்துறை, கல்வி, கட்டட நிர்மானம் போன்ற துறைகளிலும் வளம் மிக்கநிலப் பிர தேசங்கிலும் முதலீடுகளை மேற் கொள்ள எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி: இவ்விஜயத்தின் போது இளவரசரும் அவர்தலைமைய லான குழுவிழனரும் கிழக்குக்கு குறிப்பாக மட்டக்களப்புக்கு விஜயம் செய்ததாக அறிகின்றோம். ஆனால் கிழக்கு ஐந்து பத்து வரு டங்களுக்கு முன்னர் யுத்தம் காரண மாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசம்?

 பதில் : இலங்கையில் மாத்திர மல்லாமல் முழு உலக மக்களுமே யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட் டுள்ளார்கள். நாம் பயங்கரவாதி களை மனிதாபிமானத்தின் எதிரி களாகவே பார்க்கின்றோம்.

எமது நாடான சவூதி அரேபியாவும் பயங்கரவாதிகளால் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளது. பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் எந்தவகையிலும் செயற்படுபவர்கள் அல்லர்.

அவர் கள் மக்களை மிருகங்களைப் போன்று படுகொலை செய்கின்ற னர். ஆனால் இப்போது இலங்கையில் அவ்வாறான பிர்ச்சினை இல்லை. இந்த நாடு மிகப் பாதுகாப்பான நாடாக உள்ளது.

இருப்பினும் பயங் கரவாதம் நிலவிய போது இந்நாடும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டி ருப்பதை நாம் மறந்து விடவில்லை. இப்போது இலங்கையைக் கட் டியெழுப்ப நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இத னுரடாக ஐந்து பத்து வருடங்களில் நல்ல முன்னேற்றங்களைக் காண முடியும். இந்தப் பின்னணியில் தற் போதைய அரசாங்கம் சிறந்த அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது.

கேள்வி: இளவரச ரின் இலங்கைக்கான விஜயம் அழைப்பின் பேரிலானதா? அல்லது நல்லெண்ண அடிப டையிலானதா?


பதில்: உண்மையில் இது நல்லெண்ண அ டிப்படையிலானது.
இலங்கை அடுத்தவரும் சில வருடங்களில் சிங்கபூராகவோ, துபாயாகவோ அல்லது மலேசியாகவோ வளர்ச்சி  அடையமுடியும் .

ஐரோப்பா, இந்தியா, அறபு நாடுகள் போன்ற உலகின் பல பகுதிகளில் இருந்தும் இலங்கைக்கு மென்மேலும் உல்லாசப் பயணிக்ளை வரவ ழைக்க முடியும். அத்தோடு சிறந்த வர்த்தக நடவடிக்கையையும் இங்கு மேற்கொள்ள முடியும் என நாம் நம் பகின்றோம்.


கேள்வி: சவூதி அரேபியாவில் சுமார் 3இலட்சத்து 90 ஆயிரம் இலங்கைத் தொழிலாளர்கள் பணி யாற்றுகிறனர். அவர்கள் தொடர்பில் இவ்விஜயத்திநன் போது ஏதாவது பேசப்பட்டதா?

பதில்: இது தொடர்பில் எதுவித பேச்சுக்களோ, சந்திப்புக்களோ இடம்பெறவில்லை. எமது விஜயம் முற்றிலும் முதலீடு தொடர்பான சந்திப்புக ளையும் பேச்சுவார்த்தை களையும் அடிப்படையாகக் கொண் டிருந்தது. அத்தோடு இருபக்க நல் லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட் டது. நாம் ஜனாதிபதியுடன் மேற் கொண்ட பேச்சுவார்த்தையின்போது ஜனாதிபதி விவசாயத் துறையில் முதலீடு செய்யுமாறும் யோசனை முன்வைத்தார். இது தொடர்பில் நாம் விரிவாகக் கலந்துரையாடி னோம்.


கேள்வி: இறுதியாக நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


பதில்: தற்போது இந்த நாட்டில் நிலமை நம்பிக்கை தரக் கூடியதா கவும் முன்னேற்றகரமானதாகவும் உள்ளது. அதனால் நாட்டில் நிலை பேறாக அமைதி சமாதானம் ஏற்ப டவென பெளத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என எல்லோரும் ஒற்றுமையாகவும் அர்ப்ணிப்போடும் தொடர்ந்தும் உழைக்க வேண்டும். அது நாட் டுக்கு அதிக சபீட்சத்தையும் விமோ சனத்தையும் கொண்டு வரும்.

குறிப்பாக இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக் கும் முக்கிய பாலமாக செயற்பட்டு வரும் எமது நண்பருமான அப்துல் காதர் மஸீர் மெளலானாவின்மு யற்சியாலும் மீள்குடியேற்ற இரா ஜாங்க அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவின் அழைப்பிலும் தான் இளவரசரும் அவர் தலைமை யிலான குழுவினரும் இலங்கைக்கு விஜயம் செய்தனர்.

இவர்கள் எம்மை இலங்கைக்கு விஜயம் செய் யுமாறு அடிக்கடி அழைப்பு விடுத்து வந்தனர். இங்கு நல்ல சமிங்கை கள் தென்படுகின்றன. இந்நாடு அடுத்தவரும் சில வருடங்களில் சிங்கபூராகவோ அல்லது மலேசி யாவாகவோ அல்லது டுபாயாகவோ வளர்ச்சி அடைய முடியும். அர சாங்கம் மாத்திரமல்லாமல் எல்லா மக்களும் ஒற்றுமையாகப் பணி யாற்றுவது இதற்கு நல்ல சான்றாக உள்ளது. ஆகவே இலங்கை ஆசி யாவின் கிழக்கு பகுதியில் மிக முக் கியத்துவம் மிக்க நாடாகத் திகழும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இங்கு துறைமுக நகரும் அமைக்கப்
பட்டு வருவதோடு சிறந்த சூழலும் காணப்படுகின்றது.

அதனால் இங்கு வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இளவரசர் நல்லெண் ணம் கொண்டுள்ளார். எமது ஆராய் வுகளின் அடிப்படையில் இவை மேற்கொள்ளப்படும். இம்முறை விஜயம் எமக்கு திருப்பதிகரமான தாக அமைந்துள்ளது.

அதனால் அர சியல், பாதுகாப்பு மற்றும் பொரு ளாதார உறுதிப்பாடுகள் தொடர்பில் அவதானிப்புக்களை மேற்கொண்டு அதனடிப்படையில் ஒரு பில்லியன் டொலரை முதலிட முடியும் என எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி: முதலீடு செய்வதற்கான குறிப்பானதுறைகள்?

பதில்: நாம் குறிப்பாக சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கின்றோம். விஷேடமாகச் சொல்வதாயின் கிழக்கு, கொழும்பு மற்றும் பெந்தோட்டை போன்ற பிரதேசங்களில் உல்லாசப் பய ணத்துறைக்கு சிறந்த இடங்கள் காணப்படுகின்றன.

அதனால்இளவரசரும் விஷன் 2030 ஊடாக சவூதி அரேபியாவும் சூழ வுள்ள எல்லா நாடுகளும் அமைதி சமாதானம் நிலவும் நாடுகளாக மாற வேண்டும் என்றே விரும்புகின்ற னர். அதேநேரம் சவூதி அரேபியா ஒரு போதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடு அல்ல.

மாறாகப் பயங்கரவாதத்திற்கு எதிராக எமது போராடுகின்றது. உள்நாட்டு பயங்கரவாதம் காரண மாக எமது நாடு பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளது. இதனை ஒழித்துக் கட்டவென மன்னர் தலைமையில் கடுமையான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே ஒவ்வொருவரும் இன மத அடிப்படையில் அன்றி மணி தாபிமான அடிபடையில் ஒற்று மையாக, சகோதரத்துவத்துடனும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அதுவே மிகவும் தேவையானது.

நேர்காணல் : மர்லின் மரிக்கார்

இலங்கை சில வருடங்களில் சிங்கபூராகவோ, துபாயாகவோ அல்லது மலேசியாகவோ வளர்ச்சி அடையமுடியும் . இலங்கை சில வருடங்களில் சிங்கபூராகவோ, துபாயாகவோ அல்லது மலேசியாகவோ வளர்ச்சி  அடையமுடியும் . Reviewed by Madawala News on 7/31/2017 12:05:00 PM Rating: 5