tg travels

உயர்தர கலைப் பிரிவு மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கும் ஆலோசனை வகுப்பும்.



கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்கள் கொழும்பு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் அனுசரணையுடன் இம்முறை உயர்தர பரீட்சையில் தோற்ற இருக்கின்ற கலைப் பிரிவு மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் இக்கருத்தரங்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்வரும் பாடங்களில் நீங்கள் தெரிவு செய்யும் எதாவது ஒன்று கருத்தரங்கில் பரிட்சை மாதிரி வினாத்தாள் மூலம் கற்பிக்கப்படும்

1. தமிழ் - Tamil
2. அரசியல் - Political
3. அளவையியல் - Logic
4. இஸ்லாம் - Islam
5. புவியியல் - Geography
6. இதர கலைப் பிரிவுப் பாடங்கள்

இக்கருத்தரங்கில் உங்களது பாடசாலையையும் இணைத்துக் கொள்ள முடியும். நாங்கள் உங்கள் பாடசாலைக்கே வருகை தந்து கருத்தரங்கையும் ஆலோசனை வகுப்பையும் நடாத்த ஆவலாய் உள்ளோம்.  நீங்கள் செய்ய வேண்டியது

1. உங்கள் பாடசாலையின் பெயர்
2. உயர்தர பரீட்சையில் தோற்ற உள்ள மாணவர்களின் எண்ணிக்கை
3. உங்களது பாடசாலையில் மாணவர்கள் தோற்ற இருக்கும் பாடங்கள்
4. உங்களை நாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்

போன்ற விடயங்களை குறிப்பிட்டு எதிர்வரும் 25.07.2017ஆம் திகதிக்கு முன்னர் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்.

iyasdeen@lawyer.com

மின்னஞ்சல் அனுப்பிய பிற்பாடு நாங்களே உங்களை தொடர்பு கொள்வோம். மேலும் காலம் குறைவாக இருப்பதனால் கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வாய்ப்பை தவற விடாதீர்கள்.
உங்கள் மாணவர்ச் செல்வங்களும் பயன் அடையட்டும்
அல்லாஹ் உங்களையும் எங்களையும் பொருந்திக் கொள்வானாக

முகம்மது இத்ரீஸ் இயாஸ்தீன்,
பொதுச் செயலாளர்,
முஸ்லிம் மஜ்லிஸ்,
கொழும்பு பலகலைக்கழகம்
உயர்தர கலைப் பிரிவு மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கும் ஆலோசனை வகுப்பும். உயர்தர கலைப் பிரிவு  மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கும் ஆலோசனை வகுப்பும். Reviewed by Madawala News on 7/19/2017 02:04:00 PM Rating: 5