Yahya

இன்னும் மர்மம் விளங்காத துப்பாக்கி சூடு ! ஒரு விரிவான பார்வை.


கடந்த வாரம் யாழ்ப் பாணம் நல்லூர் பகுதியில் யாழ் மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகா வலர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நீதித்துறை மீதான தாக்குதலா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், மதுபோதையில் இருந்த இருவர், தமக்கிடையில் ஏற்படுத்திய சவாலுக்கு அமைய துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொள்ளப்பட்டதாக பொலிஸ் தரப் பில் கூறப்படுகிறது. இச்சம்ப வத்துக்கான உண்மைக் காரணம்
பொலிஸார் கூறும் காரணங்களை  ஏற்பதற்கு மக்கள் தயாரில்லை.

வடக்கில் ஆயுதக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார்
தவறியதை வெளிப்படையாக உணர்த்துகிறது நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்.

இன்னமும் உறுதிப்படுத்தப்படாத போதும் நீதித்துறை மீதான தாக்கு தலாகவே பொதுமக்கள் இதனைப் பார்க்கின்றனர். கடந்த 22ஆம் திகதி ழமை மாலை 5.10 மணிக்கு நல்லூர் தெற்கு வீதிப் பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் மதுபோதையில் இருந்த ஒருவர் அங்கிருந்த முச்சக்கரவண்டி தரிப் பிடத்தில் தகராறில் ஈடுபட்டிருந் துள்ளார்.

இதன் போது மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்துக்கு முன்னால் பாதுகாப்பு வழங்கிச் செல்லும் பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த நபரை அப்புறப்படுத்த முயற்சித்துள் ளார். இதன் போது மதுபோதையில் இருந்தவர் அந்தப் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியைப்
பறித்து சுடப்போவதாக மிரட்டியுள்ளார்.

 இந்த முரண்பாடு இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, நீதிபதியின் காரும் சம்பவ இடத்துக்கு வந்துள் ளது. இதன் போது காரிலிருந்து இறங்கிய நீதிபதியின் மெய்ப் பாது காப்பாளர் ஹேமச்சந்திர, மதுபோ தையில் கையில் துப்பாக்கியுடன் நின்ற நபரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருந்தார். துப்பாக்கிச் சன்னம் அருகிலிருந்த மதிலில் பட்டுள்ளது.

பதிலுக்கு மதுபோதையிலிருந்த துப்பாக்கிதாரியும் சுட்டுள்ளார். இதன் போது பொலிஸ் அதிகாரி ஹேமச்சந்திர மற்றும் அருகிலிருந்த பொலிஸ் அதிகாரி ஆகியோரின் மீது துப் பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளது.


துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியவர் அங்கிருந்த தப்பிச் சென்று, வீதியில் சென்ற பெண் ஒருவரின் மோட்டார் சைக்கிளை பலவந்தமாகப் பறித்து, அதில் ஏறித் தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரி வித்துள்ளனர்.

பொலிஸா ருக்கும் துப்பாக்கிதாரிக்கும் இடையில் முரண்பாடு இடம் பெற்றிருந்த போது நீதிபதி இளஞ்செழியனும் தனது காரி லிருந்து இறங்கி வந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகத்தில் அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்ப டவில்லை.


காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் தனது காரில் ஏற்றிக் கொண்டு வைத்தியசாலையை நோக்கி நீதிபதி சென் றிருந்தார்.

செல்லும் வழியில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்து விசாரிக்குமாறும் பணித்துள்ளார். பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைத்து நேரில் கண்டவர்களிடம் விசாரணை நடத்தியிருந்ததுடன்,  சம்பவம் இடம்பெறும் போது அங்கி ருந்தவர்கள் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரியை துரத்திப் பிடிப்பதற்கு முயற்சித்தி ருந்த போதும் அது பலன ளிக்கவில்லை. பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், இரண்டு நாட்களின் பின்னர் துப்பாக்கிதாரிதப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை அரியாலைப் பகுதியிலிருந்து மீட்டதுடன், சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்திருந்தார்கள்.

துப்பாக் கிப் பிரயோகம் நடத்திய சந்கேகநபரான அனலை தீவைச் சேர்ந்த 39 வயது டைய செல்வராசா ஜயந்தன் பொலிஸில் சரணடைந்தார்.


தானும் தனது மச்சானும் மதுபோதையில் இருந்த போது, முடிந்தால் பொலிஸின்துப்பாக்கியைப் பறித்து சுடுமாறு சவால் விடுத்ததாகவும், அதனை ஏற்றே தான் அவ்வாறு துப் பாக்கிப் பிரயோகம் செய்த தாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவர் விளக் கமறியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார். துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொண்ட ஜயந்தன், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய வர் என்றும், இவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாதவர் என்றும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.


போதையில் இருந்தவரின் செயற்பாடு என்பதற்கு அப்பால் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்ப வம் பல்வேறு சந்தேகங்களை யும் கேள்விகளையும் ஏற்ப டுத்துகின்றது. நல்லூர் தெற்கு வாசலுக்கு மிகவும் அருகில் சனநடமாட்டம் நிறைந்த பகுதி என்பதால் போதையில் இருவர் நின்று சண்டை போட்டுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. அவ்வாறு ஒருவர் நிறைபோதையில் நின் றிருந்தாலும் பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்து அதனை சரியாக லோட் செய்து குறிபார்த்து சுட்டுவிட்டு வீதியில் சென்றவர் களின் மோட்டார் சைக்கிளைப் பறித்துக் கொண்டு எந்தவித தடு மாற்றமும் இன்றி சென்றுள்ளார் என்பதும் கேள்வியாக இருக்கிறது.


மறுபக்கத்தில் சம்பவம் இடம்பெற்று சில நிமிட நேரங்களில் சம்பவ இடத்துக்குச் சென்றிருந்த யாழ் பொலிஸ் நிலையத் தைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, இது நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை யெனக் கூறியதுடன், அன்றைய தினம் இரவு பொலிஸ் பேச்சாளரும் இதே கருத்தை கொழும்பில் கூறியிருந்தார். 

விசாரணை கள் முழுமையான முன்னெடுக்கப்படாத நிலையில் இவ்வாறான கருத்தும் சந்தேகங் களுக்கு வித்திட்டுள்ளது.

யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழி யன் பல்வேறு சர்ச்சைக்குரிய தீர்ப்புக்களை வழங்கியுள்ளார். தற்பொழுது நடைபெற்று வரும் வித்தியா படுகொலை வழக்குக் குறித்த "டயல் அட் பார் விசாரணையின் தலைமை நீதிபதியாகவும் இவர் செயற்பட்டு வருகிறார். இந்த வழக்கில் பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டத்தில் உள்ள வர்களின் தொடர்புகள் படிப்படியாக வெளிப் பட்டுவரும் நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கும் அதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற கேள்விகளும் மக்களால் எழுப்பப்படு கின்றன.


ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையை வடக்கிற்கு வெளியே நடத்த வேண்டும் என்ற அழுத்தம் காணப்பட்ட சூழலில், துப்பாக்கிப் பிரயோகத்தை அடிப்படையாகக் கொண்டு வழக்கு விசாரணைகளை வேறுடத்துக்கு மாற்றும் முயற்சியா என்ற சந்தேகமும் ஏற் படுகிறது.


இச்சம்பவத்தில் படுகாயமடைந்து போதனா வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட இரு பொலிஸாரில் மெய்ப்பாதுகா வலர் ஹேமச்சந்திரவின் வயிற்றுப் பகுதி யில் ஏற்பட்ட கடும் காயத்தினால் இரத்தம் வெளியேறி உயிரிழக்க நேர்ந்தது.

அவருடைய உயிரிழப்பு நீதிபதி இளஞ்செ ழியனை பெரிதும் பாதித்திருந்தது. உயி ரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை பொறுப்பேற்க வந்திருந்த குடும்பத்தினரின் கால்களில் வீழ்ந்து நீதிபதி இளஞ்செழியன் குலுங்கி குலுங்கி அழுத சம்பவம் சகலரின் மனங்களையும் பாதித்திருந்ததுடன், அவ ருடைய மனிதாபிமானத்தை வெகுவாகப் பறைசாற்றியிருந்தது. 

பதினான்கு வருடங் கள் நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாது காவலராகவிருந்த ஹேமச்சந்திரவின் உயி ரிழப்பு அவரை மிகவும் பாதித்திருந்தது. யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து ஹேமச்சந்திரவின் சொந்த இடமான நீர் கொழும்புக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்ட போது கூடச் சென்றிருந்த நீதிபதி, அவரு டைய மகனை கட்டியனைத்து கதறியழுத காட்சிகள் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியிலும் நீதிபதியை உயர்ந்த இடத்துக் குக் கொண்டு சென்றுள்ளன. 


நீதித்துறை மீதான துப்பாக்கிச் சூடாகக் கருதி வடக்கு, கிழக்கில் நீதித்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுங்கண்ட னத்தை வெளியிட்டிருந்ததுடன், உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு வடக்கின் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு சகலரையும் கவர்ந்திருந்தது. இதுவரை காலமும் மாவீரர் தினம் மாத்திரமே யாழ் பல்க
லைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வந்த சூழலில் முதற்தடவையாக பொலிஸ் அதிகாரி ஒருவரின் உயிரிழப்புக்காக பல்க லைக்கழகத்துக்குள் அஞ்சலி செலுத்தப்பட் டுள்ளது. 

இவ்வாறான நிகழ்வுகள் இனங் களுக்கிடையிலான இடைவெளிகளைக் குறைப்பதற்கு வழியை ஏற்படுத்தியிருப்ப தாகவே அரசியல் அவதானிகள் சுட்டிக்காட் டுகின்றனர். எதுவாக இருந்தாலும், நல்லூர் துப்பாக் கிச் சூடும் அதற்காக சொல்லப்படும் கார ணங்களும் பொதுமக்களுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. மீண்டும் ஆயுத கலாசாரமொன்றை ஏற் படுத்தி அச்சுறுத்தல் இருப்பதாக காண் பிப்பதற்கு முற்சிகள் எடுக்கப்படுகின்ற னவா என்ற சந்தேகத்தையும் மக்கள் வெளியிட்டுள்ளனர். யாழ் குடாநாட்டின் சமூகசீரழிவுக ளுக்கு எதிராக கடுமையான நடவடிக் கைகளை எடுத்து வரும் நீதிபதி என்ற ரீதியில் அவர் மீதான மக்கள் ஆதரவு கூடு தலாகவே இருக்கிறது.

(தினகரன் : 28/7)

இன்னும் மர்மம் விளங்காத துப்பாக்கி சூடு ! ஒரு விரிவான பார்வை. இன்னும் மர்மம் விளங்காத துப்பாக்கி சூடு ! ஒரு விரிவான பார்வை. Reviewed by Madawala News on 7/28/2017 12:16:00 PM Rating: 5