tg travels

தம்புள்ளை விபத்தில் படுகாயமடைந்த இரண்டாம் நபர் மஜீத் சஜீத்தும் சிகிச்சை பலனின்றி வபாத்தானார்.

 
ஆரிப் எஸ்.நளீம்-

கடந்த 19.07.2017ம் திகதி தம்புள்ளை இனாமலுவையில் இடம்பெற்ற இரு சக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்து கண்டி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த அப்துல் மஜீத் சஜீத் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் வபாத்தானார். 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்து தம்புள்ள வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கதுருவெல-மாணிக்கம்பிட்டியைச் முஹம்மட் சுஹைல் சம்பவ தினமே மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த 19.07.2017ம் திகதி மோட்டார் சைக்கிளொன்றைக் கொள்வனவு செய்வதற்காக நண்பர்கள் இருவரும் கண்டி நகருக்குச்சென்று வீடு திரும்புகையிலேயே இந்த சோக சம்பவம் இடம்பெற்றது.

மரணமடைந்த சஜீத் ஓய்வு பெற்ற ஆசிரியர் அப்துல் மஜீத் என்பரின் புதல்வராவார். இவரது ஜனாஷாவைக் கதுருவெலை,மணிக்கப்பிட்டிக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்ப்படுமெனவும் தெரியவருகிறது.
தம்புள்ளை விபத்தில் படுகாயமடைந்த இரண்டாம் நபர் மஜீத் சஜீத்தும் சிகிச்சை பலனின்றி வபாத்தானார். தம்புள்ளை விபத்தில் படுகாயமடைந்த இரண்டாம் நபர் மஜீத் சஜீத்தும் சிகிச்சை பலனின்றி வபாத்தானார். Reviewed by Madawala News on 7/26/2017 10:54:00 PM Rating: 5