Ad Space avaiable

மடவளை விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பில், SLMC மடவளைக்கிளையின் ஊடக அறிக்கை.


FB மற்றும் WhatsApp இல் வரக்கூடிய விமர்சனங்களுக்கு பதில் அளிக்கவேண்டிய தேவை SLMC மடவளைக்கிளைக்கு இல்லை. 

 மைதான அபிவிருத்தி நிதி பயன்பாடு தொடர்பில் பதில் அளிக்கவேண்டிய கடப்பாடு அது தொடர்பில் ஒப்பந்தத்தைக்கோரி வழங்கிய மாவட்டச்செயலகத்திற்கும்  அதைப்பெற்றுக்கொண்ட ஒப்பந்தக்காரருக்கும் இருப்பதோடு  திட்டத்தை நெறிப்படுத்தி இறுதிவரை மேற்பார்வை செய்த கல்வித்திணைக்களத்திற்கும் மற்றும் பிரதேச செயலகத்திற்குமே உண்டு.   

குறிப்பிட்ட அபிவிருத்தித் திட்டத்திற்கான நிதியினை மடவளைக்கு கொண்டுவரும் வேலையினை SLMC மடவளைக்கிளை மேற்கொண்டதோடு ஒப்பந்தக்காரர் ஒப்பந்தத்தை பெற்றுமுடியும் வரை இந்த ஒப்பந்தத்தைப் பெற்றிருப்பது  யார் என்பதை SLMC மடவளைக்கிளை அறிந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  இந்தத்திட்டத்தில் ஊழல்கள் இடம்பெற்றதாக யாரும் கருதுவதாக இருப்பின் அது தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழுவிடமோ அல்லது குறிப்பிட்ட நிதியினை ஒதுக்கித்தந்த விளையாட்டுத்துறை அமைச்சிடமோ அல்லது ஒப்பந்தத்தை  ஒப்பந்தக்காரருக்கு வழங்கிய மாவட்ட செயலகத்திடமோ அல்லது  திட்டவரைபடத்தைக்கணித்து  திட்டத்தின் செலவுகளைத்தீர்மானித்து வேலைகளை மேற்பார்வை செய்த கண்டி கல்வித்திணைக்களத்திடமோ அல்லது பிரதேசத்தில் களத்தில் நின்று திட்டத்தினை மேற்பார்வை செய்த பாத்ததும்பறை பிரதேச செயலகத்திடமோ  முறையிட்டு தாராளமாக அறிந்துகொள்ளலாம். 

அல்லது சட்டத்தின் மூலம் இதற்கான தீர்வினைப்பெறலாம். அல்லது SLMC மடவளைக்கிளையுடன் நேரடியாகத்தொடர்பு கொண்டும்   இது தொடர்பிலான சந்தேகங்களுக்கு தெளிவுகளைப்பெற்றுக்கொள்ளலாம்.

SLMC  மடவளைக்கிளை
செயலாளர்
M.M. ஷிப்லி

(பட உதவி: H.M. Ismail)
மடவளை விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பில், SLMC மடவளைக்கிளையின் ஊடக அறிக்கை. மடவளை விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பில், SLMC மடவளைக்கிளையின் ஊடக அறிக்கை. Reviewed by Madawala News on 7/07/2017 09:50:00 PM Rating: 5