Ad Space Available here

சகோதரர் ஸப்வான் ஏன் SLTJ யில் இருந்து விலகினார் ? ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உத்தியோகபூர்வ அறிக்கை.


அன்பின் சகோதரர் ஸப்வான் அவர்களுக்கு!

கடந்த ரமழான் மாதத்தில் உங்கள் மீது புழுதிவயல் கிளையினால் முன்வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் ஜமாஅத் தலைமையகத்தில் விசாரனை நடத்தப்பட்டது.

 குறித்த விசாரனையில் தாங்கள் பாலியல் ரீதியாக தவறிழைத்ததை பகிரங்கமாக ஒப்புக் கொண்டீர்கள். மாத்திரமன்றி நீங்களாக இதனை வெளிப்படுத்திக் கொள்ளும் வரை உங்கள் மானத்தை நாம் பாதுகாப்போம் என்றொரு வாக்குறுதியும் உங்களுக்கு ஜமாஅத்தினால் புழுதிவயல் கிளை நிர்வாகிகள் முன்பாகவே வழங்கப்பட்டது.

குறித்த விசாரனை முடிந்து சென்று சில நாட்கள் அமைதியாய் இருந்தீர்கள். மீண்டும் நேற்றைய தினம் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் ‘ஆய்வுகள் ஓய்வதில்லை” என்று எந்தவொரு தெளிவுமில்லாமல் வெறுமனே கருத்து சொல்லியிருந்தீர்கள். அதற்கும் மக்கள் மத்தியில் தேவையற்ற கேள்விகள், சர்சைகள் எழும் விதமாக நடந்து கொள்ள வேண்டாம் என்று உங்களுக்கு ஜமாஅத் சார்பில் அறிவுரை சொன்னோம்.

இன்று காலையில் ஏதோ ஆய்வு செய்து ஜமாஅத்தின் கொள்கை பிழை என்று கண்டு பிடித்துள்ளதாகவும், ஆகவே ஜமாஅத்த விட்டும் வெளியேறுவதாகவும் அறிவித்துள்ளீர்கள்.

பொதுவாகவே பாலியல் போன்ற குற்றச்சாட்டுக்களில் சிக்கி, முகவரி இழக்கும் நிலை ஏற்பட்டவுடன் உங்களைப் போன்றவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம் தான் ‘மீள் பரிசீலனை” என்பதாகும்.

ஜமாத்தின் தாயியாக இவ்வளவு காலம் பணியாற்றிய உங்கள் மீள்பரிசீலனை ஆய்வின் லட்சனத்தை மருந்துக்கேனும் ஜமாஅத்திற்கோ, ஜமாஅத்தின் சக தாயிக்களுக்கோ சொல்லியதில்லை. ஆனால் மீள் பரிசீலனை செய்துள்ளீர்கள்? இதனை மக்கள் நம்புவார்கள் என்று தான் நினைக்கிறீர்களா?
உங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நேரத்தில் அது தொடர்பில் விசாரனைக்கு வருமாறு அழைத்த போது விசாரனையில் இருந்து தப்பிப்பதற்காக நீங்கள் ஆடிய நாடகம் பற்றி உங்கள் பேஸ்புக்கை பார்த்த அனைவரும் அறிவார்கள்.

நீங்கள் நடித்த படம் அடுத்த நாள் வெளியாகும் என்று அறிவித்தீர்கள். ஆனால் படம் வெளியாக வில்லை. ஏன் படம் வெளியாக வில்லை என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்த வேலையில் தான் விசாரனை முடிவுற்று பிரச்சினை தீர்க்கப்பட்டதாக நீங்களே அறிவித்தீர்கள்.

உங்கள் படம் வெளியாகாமைக்கான காரணம் என்னவென்பது படம் வெளியாவதாக நீங்கள் அறிவித்த நாள் இரவு நாம் உங்களுக்கு அனுப்பிய மெயிலில் உங்களுக்கே தெரிந்திருக்கும்.

பாலியல் சேஷ்டையில் சிக்கிக் கொண்டு அதனை மறுக்க முடியாத ஆதாரம் இருந்த நிலையில் விசாரனைக்கு வராமல் தப்பிப்பதற்காக அப்போதும் நீங்கள் இந்த மீள் பரிசீலனை நாடகத்தை கையில் எடுத்தீர்கள்.

விசாரனையில் மாட்டிக் கொண்ட காரணத்தினால் அந்த நாடகம் அறங்கேற்றம் பெறவில்லை.

உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்ட தாயிக்களிடம் சூனியத்திலும், மறுக்கப்படும் செய்திகளிலும் சில மாற்றுக் கருத்து உண்டு என்று உங்கள் கேடு கெட்ட தனத்தை மறைப்பதற்காக கதை சொன்னீர்கள். கடந்த 21.06.2017 ம் திகதி தலைமையத்தில் (ரமழானில்) விசாரனைக்கு வந்து மாட்டிக் கொண்ட அடுத்த கனம் எனக்கு கொள்கையில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது என்று சொன்னீர்கள் (வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதை நினைவூட்டுகிறோம்)

விசாரனை நடைபெற்று ஒரு மாதம் கூட கழியவில்லை. உங்கள் மீளாய்வு முடிந்து உங்களுக்கு நேர்வழியும் கிடைத்து விட்டதாக அறிவித்துள்ளீர்கள்.
ஒழுக்கமாக இருந்தால் இந்த ஜமாஅத்தில் இருக்க முடியும். ஒழுக்கம் கெட்டுப்போனால் விரட்டி விடுவார்கள். என்பது மிகத் தெளிவாக உங்களுக்கும் தெரியும். இந்நிலையில்தான் வெளியில் சென்று எதிர் தரப்பு மக்களிடமாவது தம்மை தக்க வைத்துக் கொள்ள சூனியம், முரண்படும் செய்தியில் நான் மீளாய்வு செய்துள்ளேன். என்ற வாதம் உங்களுக்கும் தேவைப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுடன் நீங்கள் தனிமையில் செய்த மீளாய்வு என்னவென்பது 21.06.2017 அன்று நடைபெற்ற விசாரனையில் தான் தெளிவாக தெரிந்து விட்டதே!

இந்த நாடகங்கள் வெளியில் மக்களுக்கு தெரிய வராது என்ற குருட்டு நம்பிக்கையில் இப்படி செய்கிறீர்கள் என்பது தெளிவானது.
இந்த ஜமாஅத்தில் இருக்கும் இலட்சக் கணக்கான மக்கள் வழிகேட்டில் இருந்து நேர்வழியைத் தேடி வந்து இணைந்து கொண்வர்கள் தான். அதில் இருக்கும் ஒரு சில பேர் ஒழுக்கக் கேட்டில் சிக்கிக் கொண்டு அது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின் தாங்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்பது மக்களுக்கு தெரிந்து விடுமோ என்பதினால் முற்கூட்டியே கொள்கையில் பிரச்சினை என்று கூறி நாமே ஒதுங்கிக் கொண்டால் ஜமாஅத்தின் எதிர் கொள்கையில் உள்ளவர்களிடம் அடைக்களம் கிடைக்கும் என்ற ஆசையில் இதுபோன்ற காரியத்தில் ஈடுபடுகிறார்கள். அதற்கு தாங்களும் விதி விலக்கல்ல.

பாலியல் ரீதியில் நீங்கள் செய்த அசிங்கத்தை நாமாக வெளிப்படுத்த மாட்டோம் என்றும் நீங்கள் உங்களை நல்லவர், ஆய்வாளர் என்று கட்ட நினைத்து ஜமாஅத்தை பலிகடாவாக்க நினைத்தால் உங்கள் ஒழுக்கத்தின் லட்சனம் வெளியில் தெரியவரும் என்றும் விசாரனையின் போதே உங்களுக்கு தெளிவாக சொல்லி விட்டோம்.

தாராளமாக நீங்கள் ஜமாஅத்தை விட்டு செல்லுங்கள். நீங்கள் இந்த ஜமாஅத்திற்கு தகுதியற்ற ஒருவர் தான் என்பது விசாரனையில் தெளிவாக நீரூபிக்கப்பட்டுள்ளது. போகிற இடத்திலாவது அன்னியப் பெண்கள் விஷயத்தில் உங்கள் ஒழுக்கத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று உங்களுக்கு அறிவுரை சொல்ல விரும்புகிறோம்.

அன்புடன்
A.G ஹிஷாம் M.I.Sc
செயலாளர்,
ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
சகோதரர் ஸப்வான் ஏன் SLTJ யில் இருந்து விலகினார் ? ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உத்தியோகபூர்வ அறிக்கை. சகோதரர் ஸப்வான் ஏன் SLTJ யில் இருந்து விலகினார் ? ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உத்தியோகபூர்வ அறிக்கை. Reviewed by Madawala News on 7/17/2017 09:38:00 AM Rating: 5