tg travels

சிம்பாப்வேயை விட 10 ஓட்டங்கள் குறைவாக பெற்று முதல் இன்னிங்க்சை முடித்த இலங்கை அணி.


இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகின்றது.

இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சின் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 356 ஓட்டங்களை பெற்றது. கிரேக் எர்வின் அதிகபட்சமாக 160 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் ரங்கன ​ஹேரத் 116 ஓட்டங்களைக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.

பின்னர்  தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை இன்று காலை அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களை.. அதாவது சிம்பாப்வேயை விட 10 ஓட்டங்கள் குறைவாக எடுத்து முதல் இன்னிங்க்சை முடித்துக்கொண்டது.
தரங்க 71 ஓட்டங்களையும் அணியின் தலைவர் சந்திமால் 55 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக்கொண்டனர். சிம்பாப்வே தனது இரண்டாம் இன்னிங்க்சை ஆரம்பித்து தற்போது விக்கட் இழப்பின்றி 9 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தை தொடர்கிறது.
சிம்பாப்வேயை விட 10 ஓட்டங்கள் குறைவாக பெற்று முதல் இன்னிங்க்சை முடித்த இலங்கை அணி. சிம்பாப்வேயை விட 10 ஓட்டங்கள் குறைவாக பெற்று முதல் இன்னிங்க்சை முடித்த இலங்கை அணி. Reviewed by Madawala News on 7/16/2017 11:41:00 AM Rating: 5