tg travels

சோவியத் ஒன்றியம் உடைகிறது..


-Muja ashraff   -

சோவியத் ஒன்றியம் உடைந்து இவையனைத்தும் தனி நாடுகளானவுடனே, என்ரான், பிரிட்டீஷ் பெட்ரோலியம், மொபில் எக்ஸான், அமோகோ, செவ்ரான், யூனோகால் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்நாடுகளை நோக்கி படையெடுத்தன. இந்த எண்ணெய் நிறுவனங்களுக்காக அந்நாடுகளுடன் வர்த்தக பேரம் பேசியவர்கள் இன்றைய அமெரிக்க ஆளும் கட்சியான குடியரசுக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள், குறிப்பாக இன்றைய துணை அதிபர் டிக் செனி.

எண்ணெய் எடுப்பதற்கான பேரங்கள் படிந்தாலும் எண்ணெய் எரிவாயுவை கொண்டு செல்லும் குழாய்களெல்லாம் ரசியா வழியே தான் செல்கின்றன என்பதால் ரசியா கோருகிற வாடகையை கொடுக்க வேண்டும். அல்லது எண்ணெய் எரிவாயுவை ரசியாவுக்கு விற்றுவிட வேண்டும்.

‘கஜாக்ஸ்தானிலிருந்து பிரிட்டீஷ் காஸ் எடுக்கின்ற எரிவாயுவை ஆயிரம் கன மீட்டர் 8.74 டாலருக்கு ரசியாவுக்கு விற்க வேண்டியிருக்கிறது’ என்றும் ‘உலகச் சந்தையில் இதையே 80 டாலருக்கு விற்று அதிக லாபம் பார்க்க முடியும்’ என்றும் கூறி வயிறெரிந்தது அந்த நிறுவனம். (எண்ணெய் எரிவாயு விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளையை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்)

1993 – இல் அமெரிக்காவின் செவ்ரான் நிறுவனம் கஜாக்ஸ்தானிலிருந்து எண்ணெய் எடுப்பதற்கு 10 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் போட்டது. ஆனால் ரசியாவோ கஜாக்ஸ்தானிலிருந்து கருங்கடல் வரை புதிய குழாய் அமைக்கத் திட்டமிட்டது. செவ்ரானின் திட்டம் நொறுங்கியது (நியூஸ் வீக், ஏப்ரல் 1995 )
அமெரிக்க முதலாளிகளின் ஆத்திரத்தை உடனே பிரதிபலித்தது கிளின்டன் அரசு. “யாருடைய செல்வாக்கு மண்டலத்தையும் அமெரிக்கா அங்கீகரிக்காது. அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தக உரிமைகளை அரசு பாதுகாக்கும்” என்று எச்சரித்தது.

என்ன தான் எச்சரிக்கைகள் விடுத்தாலும் புவியியல் ரீதியாக மத்திய ஆசியாவைச் சூழ்ந்திருக்கும் ரசியாவைத் தவிர்த்து – ஐரோப்பிய சந்தைக்கு குழாய் பாதை அமைக்க வேண்டுமானால் ஈரான் அல்லது ஜார்ஜியாவின் வழியே துருக்கியை இணைக்கும்படி பாதை அமைக்கப்பட வேண்டும்.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. மேலும் வளைகுடாவில் ஈரானை தனிமைப்படுத்துவதே அமெரிக்காவின் அரசியல் தந்திரம். ஈரானையும் துருக்கியையும் குழாய் மூலம் இணைப்பதன் மூலம் அந்நாடுகளிடையே நட்புறவு தோன்றிவிடக்கூடும் என்று அமெரிக்காவும் இசுரேலும் அஞ்சுகின்றன. ஜார்ஜியாவிலோ ஆயுதந்தாங்கிய மாஃபியாக் குழுக்களின் அபாயம்
சோவியத் ஒன்றியம் உடைகிறது.. சோவியத் ஒன்றியம் உடைகிறது.. Reviewed by Madawala News on 7/02/2017 12:05:00 AM Rating: 5