Kidny

Kidny

முஸ்லிம் மாணவர்கள் வந்தால், புத்தர் சிலையை வணங்க வேண்டும். பழைய மாணவர்களும் பெற்றோரும் நிபந்தனை விதித்த சம்பவம்.


-ஏ: ஆர் பரீல் -

அண்மையில் ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கள வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யபட்டு இருந்த ஹிக்கடுவ கல்வி வலய பிரிவின் ரமலான் நிகழ்வு ஒன்றுக்கு கின்தொட்ட சாஹிரா பாடசாலை  முஸ்லிம். மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிந்தோட்டை ஸாஹிரா வித்தியாலய மாணவர்கள் நிகழ்வுகளுக்கு வருகை தந்தால் பாடசா லையிலுள்ள புத்தர் சிலைக்கு மலர் சமர்ப்பித்து வணங்க வேண்டுமென பாடசாலையின் பழைய மாணவர்களும் பெற்றோரும் நிபந்தனை
விதித்துள்ளனர்.

இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் பாடசாலை அதிபருக்கும், பழைய மாணவர்களுக் குமிடையில் கருத்து வேறுபாடு நில வியதால் அங்கு பதற்ற நிலையொன்று உருவாகியது.

ஸ்ரீ சுமங்கல பாடசாலையில் இவ்வா றான நிகழ்வு இதற்கு முன்பு நடத்தப் படவில்லை.

ஹிக்கடுவ ஸ்ரீரீ சுமங்கல தேரர் நிறுவிய இப்பாடசாலையில் இவ்வாறான ஒன்றுகூடல் நிகழ்வு நடத்தப்பட முடியாது. இங்கு வெசாக் பண்டிகை நிகழ்வோ, புத்தாண்டு நிகழ்வோ இதுவரை நடாத்தப்பட வில்லை என பழைய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இவ்வாறான ஒன் றுகூடல் நிகழ்வு பற்றி எட்டாம் தர பாட புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது. அதற்கிணங்க கல்வி அமைச்சின் ஆலோசனைக்கமையவே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிபர் தெரிவித்தார்.

 பழைய மாணவர்களின் எதிர்ப்பு காரணமாக குறிப்பிட்ட விழா விற்கு சமூகமளிக்க வேண்டாமென கிந்தோட்டை ஸாஹிரா பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஸ்ரீமங்கல மகா வித்தியாலய அதிபர்
ஜி.எச்.மொஹொட்டி அறிவித்தார்.

இதனையடுத்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஏனைய 4 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்குபற்றுதலுடன் நிகழ்வு முஸ்லிம் கலாசார விழாவாக நடைபெற்றது.

இதில் கிந்தோட்டை ஸாஹிரா மாணவர்கள் பங்கேற்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
(படம் : அடையாளப்படம் )
முஸ்லிம் மாணவர்கள் வந்தால், புத்தர் சிலையை வணங்க வேண்டும். பழைய மாணவர்களும் பெற்றோரும் நிபந்தனை விதித்த சம்பவம். முஸ்லிம் மாணவர்கள் வந்தால், புத்தர் சிலையை வணங்க வேண்டும். பழைய மாணவர்களும் பெற்றோரும் நிபந்தனை விதித்த சம்பவம். Reviewed by Madawala News on 7/24/2017 09:15:00 AM Rating: 5