Kidny

Kidny

நேற்றிரவு முஹம்மத் சஷிம் என்ற தம் மூத்த சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்த மூன்று சகோதரர்களும் கைது! #இலங்கை



எகலியகொட பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களுக்கு இடையில் நேற்று (18) இரவு 9.15 மணியளவில்  இடம்பெற்ற மோதலில், ஒருவ​ர்  உயிரிழந்துள்ளதாக எகலியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில், 34 வயதுடைய முஹம்மத் சஷிம் என்ற நபர் எகலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சகோதரர்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஏனைய மூன்று சகோதரர்களும் ஒன்றிணைந்து மூத்த சகோதரரைப் பொல்லால் தாக்கி, பின்னர் கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்று சந்தேக நபர்களையும் எகலியகொட பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்
நேற்றிரவு முஹம்மத் சஷிம் என்ற தம் மூத்த சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்த மூன்று சகோதரர்களும் கைது! #இலங்கை நேற்றிரவு முஹம்மத் சஷிம் என்ற தம் மூத்த  சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்த மூன்று சகோதரர்களும் கைது! #இலங்கை Reviewed by Madawala News on 7/19/2017 02:24:00 PM Rating: 5