Kidny

Kidny

சப் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்.. வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கையில் இடைமறித்து தாக்குதல். #வடமராட்சி


-பாறுக் ஷிஹான்-

வடமராட்சி கரவெட்டி கலிகைப் பகுதியில் உப பொலிஸ் பரிசோதகர்  மீது  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு (26)  கொடிகாமம் காவல் நிலையத்தில் கடமையாற்றும்  சிந்துராஜ்(வயது-30) என்பவர் மீது மூவர் கொண்ட குழுவினர் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கலிகை – யாக்கரை வீதியில் வைத்து   தனது இரவு கடமையை முடித்து விட்டு வடமராட்சி பகுதியில் உள்ள வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கையில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த  வீதி வழியாக மோட்டார்ச்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரை வழிமறித்த அந்த  இனந்தெரியாத குழுவினர்  அவர் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் பொலிஸ் உத்தியொகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த தாக்குதலாளிகளிடம் இருந்து தப்பித்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கொடிகாமம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்  சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து  மோட்டார் சைக்கிள் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சப் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்.. வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கையில் இடைமறித்து தாக்குதல். #வடமராட்சி சப் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்.. வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கையில் இடைமறித்து தாக்குதல். #வடமராட்சி Reviewed by Madawala News on 7/27/2017 02:09:00 PM Rating: 5