tg travels

அமெரிக்க ராணுத்தில் சேர முயற்சித்து கைதான சிவம் பட்டேல். ஐ.எஸ்.தீவிரவாத ஆதரவாளர் என கண்டுபிடிக்கப்பட்டு கைது.


அமெரிக்காவின் நார் போல்க் பகுதியை சேர்ந்தவர் சிவம் பட்டேல் (27). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சமீபத்தில் இவர் அமெரிக்க ராணுவம் மற்றும் விமானபடையில் சேர விண்ணப்பம் செய்திருந்தார்.

அதில் தான் கடந்த 7 ஆண்டுகளாக எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. குடும்ப விழாவுக்காக 2011-12-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவுக்கு சென்று வந்தேன் என குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து அவரது தந்தையிடம் விசாரித்த போது சிவம்படேல் முஸ்லிமாக மதம் மாறி இருக்கலாம் என  கூறி  இவர் சீனா மற்றும் ஜோர்டானுக்கு பயணம் செய்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். . அதை தொடர்ந்து அவரது அறையை அமெரிக்க உளவுப்பிரிவு போலீசார் சோதனையிட்டனர்.

அதில் அவர் இன்டர்நெட்டில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பத்திரிகையில் இருந்து செய்திகளை எடுத்து இருந்தார். அந்த இயக்கத்தில் சேருவது எப்படி என்ற தகவல்களை சேகரித்து வந்தார்.

மேலும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக நிதி உதவி திரட்டி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க ராணுத்தில் சேர முயற்சித்து கைதான சிவம் பட்டேல். ஐ.எஸ்.தீவிரவாத ஆதரவாளர் என கண்டுபிடிக்கப்பட்டு கைது. அமெரிக்க ராணுத்தில் சேர முயற்சித்து கைதான சிவம் பட்டேல்.  ஐ.எஸ்.தீவிரவாத ஆதரவாளர் என கண்டுபிடிக்கப்பட்டு கைது. Reviewed by Madawala News on 7/09/2017 12:09:00 PM Rating: 5