Kidny

Kidny

திகன நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு . சடலம் மெனிக்ஹின்ன வைத்தியசாலையில்...


கண்டி, திகன பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் நண்பர்களுடன் சுற்றுலா விடுதிக்குச் சென்று அங்குள்ள நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்தப்போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது உயிரிழந்தவர் ஹேவாஹெட்ட, ரஹதுன்கொட பகுதியைச் சேர்ந்த 33வயதான ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் இன்று (24) அனுமதிக்க இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
திகன நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு . சடலம் மெனிக்ஹின்ன வைத்தியசாலையில்... திகன நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு . சடலம் மெனிக்ஹின்ன வைத்தியசாலையில்... Reviewed by Madawala News on 7/24/2017 03:04:00 PM Rating: 5