Kidny

Kidny

நாய்க்கு எங்கு அடித்தாலும் காலைத் தூக்குவது போல உங்களது செயற்பாடுகள் ...


அக்கரைப்பற்று அழியட்டும் என அதாஉல்லாவும் ஆதரவாளர்களும் விரும்புகின்றார்கள் என்ற தலைப்பிலான சகோதரர் தவம் அவர்களது முகநூல் பதிவுகளை பார்க்கக் கிடைத்தது. 

அதாஉல்லா செத்த பாம்பு என நீங்கள் தான் கூறினீர்கள்.

அதாஉல்லாவிடம் எந்த அரசியல் அதிகாரமும் இல்லை எனவும் நீங்கள் தான் கூறியிருந்தீர்கள்.
தற்போதைய அரசாங்கமும், ஜனாதிபதியும், பிரதமரும் உங்களது கட்சியால் உருவாக்கப்பட்டதாக நீங்கள் உரிமை கோரி வருகின்றீர்கள். 

நீங்கள் உள்ள முஸ்லீம் காங்கிரஸ் தற்போது உச்ச அதிகாரத்தில் உள்ளதாக உங்களது தலைவர் கூறியிருந்தார். 

இவ்வளவு இருக்க, ஒன்றுமே இல்லாத அதாஉல்லாவும் அவரது ஆதரவாளர்களும் நீங்கள் எடுத்த முயற்சிகளை தடுத்தார்கள் என்று கூறுவதற்கு வெட்கம் இல்லையா?

அக்கரைப்பற்றில் அதாஉல்லாவுக்கு வாக்குகளே கிடையாது என்றீர்கள். அப்படியென்றால் மக்கள் உங்களுடன் என்றால் ஏன் உங்களால் இவைகளை மக்கள் ஆதரவுடன் நிறைவேற்ற முடியவில்லை. 

நாய்க்கு எங்கு அடித்தாலும் காலைத் தூக்குவது போல உங்களுக்கு எது முடியாது போனாலும் அதற்கு அதாஉல்லாவையும் ,  ஆதரவாளர்களையும் காரணம் காட்டுவது உங்களது வழக்கமாகிட்டு. 

கடந்த ஆட்சிக் காலத்திலும் உங்களது தலைவரும் நீங்களும் இதைத்தான் செய்தீர்கள். இப்போதும் அதையே செய்கிறீர்கள். 

எதையும் இதயசுத்தியுடன் இறைவனுக்குப் பயந்து மக்கள் மீதும் மண் மீதும் உன்மையான நேசம் கொண்டு முன்னெடுத்ததினால் அதாஉல்லாவின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்தன அல்ஹம்துல்லில்லாஹ்!

உங்களது எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் நிச்சயம் உங்களாலும் வெற்றி பெற முடியும். உங்கள் உள்ளத்தின் தூய்மை பற்றி நீங்களும் உங்களை படைத்த றப்புமே நன்கு அறிவீர்கள். 

நம்மால் முடியாது என்ற போது அதற்கான உன்மைக் காரணம் என்னவென சுய விமர்சனமும், சுய விசாரனையும் செய்யாமல் மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்துவது பண்புடமையல்ல என்பதனை நீங்கள் நன்கு அறிவீர்கள். 

மாகாண சபையின் காலம் முடிவடைய உள்ள இத்தருணத்தில் என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்ற விரக்தியில் 05 வருட காலம் திருகோணமலையில் உள்ள கதிரையினை சூடாக்கிய கவலையில் நீங்கள் இப்படிக் கூறுகிறீர்கள் என்பது எங்களுக்கு விளங்குகின்றது. பாவம் மக்கள் இனியும் ஏமாற்றாதீர்கள்.

உங்களை நம்பி நடுக்கடலில் தள்ளப்பட்ட விவசாயிகள் பாவம். அது பற்றி விரிவாக பின்னர் பதிவிடலாம் என நினைக்கின்றேன்.

சட்டத்தரணி எம்.எம். பஹீஜ்
தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் 
தேசிய காங்கிரஸ்


 
நாய்க்கு எங்கு அடித்தாலும் காலைத் தூக்குவது போல உங்களது செயற்பாடுகள் ... நாய்க்கு எங்கு அடித்தாலும் காலைத் தூக்குவது போல உங்களது செயற்பாடுகள் ... Reviewed by Madawala News on 7/28/2017 07:17:00 AM Rating: 5