tg travels

கடையை உடைத்து கொள்ளை. பொதுமக்களிடம் வசமாக சிக்கிய திருடனுக்கு போலீசார் ஆதரவு. #இலங்கை


கடையொன்றை உடைத்து கொள்ளையிட முயன்ற இராணுவத்திலிருந்து தப்பிய வீரர் ஒருவர் ஊர்மக்களால்
மடக்கிப் பிடிக்கப் பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டார்.இந்த சம்பவம் நேற்று முன்தினம் வெலிகம பகுதியில்
இடம்பெற்றது.

வெலிகம பகுதியில் உள்ள வெள்ளி நகைக் கடையொன்றின் மேல் மாடி கண்ணாடி கதவை  உடைத்துள்ள குறித்த நபர் நகைகளை கொள்ளையிட முற் பட்டுள்ளார்.

கடையை உடைக்கும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் உரி
மையாளர்களிடம் அறி வித்துள்ளனர். உடனே ஊர்மக்கள் அங்கு விரைந்து திருடனை மடக்கிப் பிடித்துள்ளனர்.

பொலிஸாருக்கு தகவல் அனுப்பப்பட்டதையடுத்து வெலிகம பொலிஸார் அங்கு விரைந்துள்ளனர். ஆனால் அவர்கள் திருடனுக்கு சார்பாக அவரை தப்பவைக்கும் வகையில் செயற்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

கடையை உடைத்து கொள்ளை. பொதுமக்களிடம் வசமாக சிக்கிய திருடனுக்கு போலீசார் ஆதரவு. #இலங்கை கடையை உடைத்து கொள்ளை. பொதுமக்களிடம் வசமாக சிக்கிய திருடனுக்கு போலீசார் ஆதரவு. #இலங்கை Reviewed by Madawala News on 7/31/2017 10:50:00 AM Rating: 5