Ad Space avaiable

காணாமல்போன இளம் தாயும் மகளும் ரயில் மோதி உயிரிழப்பு.


அலவ்வ பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் தாய் மற்றும் மகளின் சடலங்களை, அலவ்வ பொலிஸார் இன்று (10) காலை மீட்டுள்ளனர்.

அலவ்வ பகுதியைச் சேர்ந்த 31 வயதான பெண் மற்றும் அவரின் 9 வயதான மகள் ஆகியோரது சடலங்களையே பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவர்கள் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் கணவன், அவரது மனைவியும், பிள்ளையும் காணாமல் போயுள்ளதாக நேற்று (9) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

(படம் அடையாலப்படம்)
காணாமல்போன இளம் தாயும் மகளும் ரயில் மோதி உயிரிழப்பு. காணாமல்போன இளம் தாயும் மகளும் ரயில் மோதி உயிரிழப்பு. Reviewed by Madawala News on 7/10/2017 12:02:00 PM Rating: 5