Ad Space avaiable

நடுவீதியில் குப்பைகள் .யார் இதை அகற்றுவது. இது கிண்ணியாவில்.


கிண்ணியா நகர சபை பகுதிக்குட்பட்ட பெரியாற்று முனை வீதியில் குப்பைகள் இரவில் நடுவீதியில் காணப்படுகின்றமையும் நகர சபையினால் வீதியோரங்களில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பெட்டிகளும் நிரம்பி வழிகின்றபோதிலும் இதனை அகற்றுவதற்கு உரிய அரச தரப்பு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை அகற்றாமல் இருப்பதனால் வீதியோரங்களில் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றமையும் இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

உரிய நேரத்திற்கு இக்குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் மேலும் கேட்டுக் கொள்கின்றனர்கள்.
கிண்ணியா நகர சபையின் கவனத்திற்கு..

A.H.  ஹஸ்பர் 

நடுவீதியில் குப்பைகள் .யார் இதை அகற்றுவது. இது கிண்ணியாவில். நடுவீதியில் குப்பைகள் .யார் இதை அகற்றுவது. இது கிண்ணியாவில். Reviewed by Madawala News on 7/20/2017 09:58:00 AM Rating: 5