tg travels

ரஷ்யா- மத்திய ஆசியா - சீனா.


Muja ashraff 

1991லேயே சோவியத் ஒன்றியத்திலிருந்து மத்திய ஆசிய நாடுகள் பிரிந்துவிட்ட போதிலும், இன்னமும் அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியில் பல விதங்களில் அவை ரசியாவுடன் பிணைக்கப்பட்டுள்ளன. எண்ணெய் உள்ளிட்ட அவற்றின் பெரும்பான்மையான வர்த்தகங்கள் இன்னமும் ரசியாவுடன் தான்.

உஸ்பெக்கிஸ்தான் தவிர்த்து எல்லா நாடுகளிலும் ரசிய இராணுவம் இருக்கிறது. உஸ்பெக்கிஸ்தான் இராணுவத்திலும் அதிகாரிகளில் பலர் ரசியர்கள். பனிப்போர் காலத்து அணு ஆயுதங்களும் எங்கும் இருக்கின்றன. கஜாக்ஸ்தானின் இராணுவத்தை ரசிய இராணுவத்துடன் இணைத்து விடுவதற்கான பேச்சுவார்த்தையும் நடக்கிறது.

இப்போது “இசுலாமியக் குடியரசு” என்று இந்நாடுகள் தம்மை அழைத்துக்கொண்டாலும் ஷரியத் சட்டங்கள் போன்றவை அங்கே அமலில் இல்லை. தேர்தல்கள் நடத்தப்பட்ட போது நாட்டை ஆளும் அதிபர்கள் முன்னாள் ரசிய போலி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தான். பழைய மரபின் தொடர்ச்சியாக எண்ணெய் வயல்கள் எல்லாம் அரசுடைமையாகவே உள்ளன. ஆனால் இந்த அதிபர்கள் அனைவரும் ஊழல் சர்வாதிகாரிகள்.

பன்னாட்டு நிறுவனங்கள் வாரி வழங்கும் இலஞ்சத்தையும் வாங்கிக்கொண்டு, ரசியாவுடனான உறவுகளையும் துண்டித்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் சர்வாதிகாரிகள் இவர்கள்.

ரசியாவோ போலி கம்யூனிசம் வீழந்து முதலாளித்துவ சர்வாதிகாரம் நிலைநாட்டப்பட்டுவிட்ட நாடு என்ற போதிலும், ஒரு அணு ஆயுத வல்லரசு என்ற முறையிலும், இராணுவ வலிமையிலும் அமெரிக்காவின் உலக இராணுவ மேலாதிக்கத்தை இன்னமும் அச்சுறுத்துகிறது. தேசிய வெறியனான ஜெரினோவ்ஸ்கி முதல் அதிபர் புடின் வரை ரசியாவின் முதலாளித்துவ அரசியல்வாதிகள் யாரும் தங்கள் உலக மேலாதிக்கக் கனவைக் கைவிட்டுவிடவில்லை என்பதையும் அமெரிக்கா அறிந்தே இருக்கிறது.

பல மத்திய ஆசிய நாடுகளுடன் பொது எல்லையை கொண்டுள்ள சீனா, அமெரிக்காவுடன் விரிவான வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்த போதும் அதன் இராணுவ வல்லமையையும், தென்கிழக்காசியப் பொருளாதாரத்தில் அதன் செல்வாக்கையும் குலைப்பது அமெரிக்க உலகத் திட்டத்தின் நோக்கம்.  மத்திய ஆசிய நாடுகளுடன் வளர்ந்து வரும் சீன வர்த்தகம், சீனா அமைத்திருக்கும் சீனா –  காஜக்ஸ்தான் ரயில் பாதை ஆகியவை அமெரிக்காவை உறுத்தும் கூடுதல் பிரச்சினைகள்.
ரஷ்யா- மத்திய ஆசியா - சீனா. ரஷ்யா- மத்திய ஆசியா - சீனா. Reviewed by Madawala News on 7/06/2017 08:07:00 PM Rating: 5