tg travels

(படங்கள்) பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் இளைஞன் மரணம். பிரதேசத்தில் பதற்றநிலை.

 
பாறுக் ஷிஹான்

வடமராட்சி கிழக்குப் பகுதியில் பருத்தித்துறைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் கொல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்குப் பகுதி குடத்தனை 6ம் கட்டையை அண்டிய பகுதியில் இன்று(9) மாலை 3.40அளவில் பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்  
யோகராசா தினேஸ் ( வயது-25) இளைஞனே உயிரிழந்தவராவார்.


வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தார் என்றும் பொலிஸார் மறித்தபோதும் அவர் நிற்காத காரணத்தாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் பொலிஸ் தரப்பால் கூறப்பட்டது.

இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் மந்திகை மருத்துவமனைக்கு வந்த பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜீப் மீது ஆத்திரமடைந்த மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


அத்துடன் காங்கேசன் துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் மகாசிங்க காங்கேசன்துறை நெல்லியடி வல்வெட்டித்துறை பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உட்பட பெரும் எண்ணிக்கையான பொலிஸார் மந்திகை ஆதார மருத்துவனைக்கு வருகை தந்ததுடன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

மேலும் இச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் நெல்லியடி வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  
(படங்கள்) பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் இளைஞன் மரணம். பிரதேசத்தில் பதற்றநிலை. (படங்கள்) பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் இளைஞன் மரணம். பிரதேசத்தில் பதற்றநிலை. Reviewed by Madawala News on 7/09/2017 08:28:00 PM Rating: 5