tg travels

சிறைக்காவலர்கள்.யாழ் நீதிமன்றில் இருந்து அழைத்துச் சென்றபோது கைதி தப்பியோட்டம்.


-பாறுக் ஷிஹான்-

 நீதிவான்நீதிமன்றில் இருந்து கைதி ஒருவர்   தப்பியோட்டிய நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

திருட்டுக் குற்றச்சாட்டில் விளக்கமறியல் விதிக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர்  இன்றைய தினம்(27) காலை   யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு  அவரை(கைதி) சிறைக் காவலர்கள் அவரைச் சிறைக்காவலர்கள் பொறுப்பேற்று அழைத்துச்  சென்றபோதே  நழுவித் தப்பியோடியுள்ளார்

இதன் போது அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

குறித்த தப்பி சென்ற கைதிக்கு   யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்த  நிலையில்  இவ்வாறு  தப்பி சென்றுள்ளார்.

யாழ்ப்பாணம் - அரியாலை பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த இக்கைதி கைதி களவு குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று  யாழ் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
 இந்நிலையில் நீதிமன்றத்திற்கு  அழைத்துவரப்பட்ட நிலையில்   நீதிமன்றில் உள்ள சிறைக்கூடத்தில் கைதிகளை விடுவதற்கு இடம் பற்றாக்குறை காரணமாக மன்றின் அருகாமையில் உள்ள இருக்கையில் இருத்தி வைக்கப்பட்ட போது சிறைச்சாலை உத்தியோகத்தருக்குத் தெரியாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தப்பிச் சென்றவரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறைக்காவலர்கள்.யாழ் நீதிமன்றில் இருந்து அழைத்துச் சென்றபோது கைதி தப்பியோட்டம்.  சிறைக்காவலர்கள்.யாழ் நீதிமன்றில் இருந்து  அழைத்துச்  சென்றபோது கைதி தப்பியோட்டம். Reviewed by Madawala News on 7/27/2017 01:59:00 PM Rating: 5