Kidny

Kidny

குடும்பக் கட்டுப்பாடு முக்கியமாம்... கல்யாணப் பரிசாக காண்டம் கொடுப்பதாக அறிவித்தது யோகி ஆதித்யநாத்தின் அரசு.


கல்யாணப் பரிசாகத் தங்கம், வெள்ளி, வைரம் என்று பரிசளிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஒரு மாநில அரசு தன் மக்களுக்குக் கல்யாணப் பரிசாகக் காண்டம் கொடுப்பதாக அறிவித்து அதிர வைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் இப்படியொரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வலியுறுத்த புதுமணத் தம்பதியருக்குக் கல்யாணப் பரிசாகக் காண்டம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது அம்மாநில அரசு. இதற்கு ‘மிஷன் பரிவார் விகாஷ்’ எனப் பெயரிட்டுள்ளது.

உலக மக்கள் தொகை தினமான ஜூலை 11ம் தேதி இத்திட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது. இது குறித்து திட்டத்தின் மேலாளர் அவினாஷ் சக்சேனா சொல்வது இதுதான், ‘‘புதுமணத் தம்பதிகளுக்குத் திருமண வாழ்வின் பொறுப்பை உணர்த்தும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. பரிசுப் பெட்டியில் காண்டங்கள், அவசரகாலக் கருத்தரிப்புத் தடுப்பு மாத்திரைகள், பொதுவான கருத்தரிப்புத் தடுப்பு மாத்திரைகள், டவல்கள், கைக்குட்டை, நகம் வெட்டி, சீப்பு, கண்ணாடி உள்ளிட்ட பொருள்கள் இருக்கும்’’ என்கிறார்.
குடும்பக் கட்டுப்பாடு முக்கியமாம்... கல்யாணப் பரிசாக காண்டம் கொடுப்பதாக அறிவித்தது யோகி ஆதித்யநாத்தின் அரசு. குடும்பக் கட்டுப்பாடு முக்கியமாம்... கல்யாணப் பரிசாக காண்டம் கொடுப்பதாக அறிவித்தது யோகி ஆதித்யநாத்தின் அரசு. Reviewed by Madawala News on 7/07/2017 02:27:00 PM Rating: 5