Kidny

Kidny

ராஜிதவின் சிங்கப்பூர் சிகிற்சைக்கு ஜனாதிபதி நிதியில் இருந்து 100 லட்சம்..


மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன இடையே இன்று பாராளுமன்றில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.


அரச வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அனுரகுமார பாராளுமன்றில் விமர்சனம் முன்வைத்த போது ஒருவருக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் அரச வைத்தியசாலைகள் தரமாக உள்ளது என்றால் ஏன் சுகாதார அமைச்சர் சிகிற்சைக்காக சிங்கப்பூர் சென்றார் என கேள்வி எழுப்பிய அதேவேளை அதற்காக ஜனாதிபதி நிதியில் இருந்து 100 லட்சத்தை பெற்றுக்கொண்டதாகவும் அதற்காக வெட்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மோதரை மீன் பிடி துறைமுகத்தினை அரச மதிப்பீட்டு திணைக்களம் 17 லட்சம் ரூபாவுக்கு மதிப்பீடு செய்திருந்த நிலையில் அதனை வெறும் 125 ஆயிரம் ரூபாவுக்கு 300 மாதங்களுக்கு குத்தகைக்கு விட்டு மோசடி செய்துள்ளாகவும் ஊழல் மோசடி ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்த போது ஜனாதிபதியுடன் பேசி அந்த ஆணைக்குழுவின் தலைவரையே இடம்மாற்றம் செய்ததாக குறிப்பிட்டார்.

ராஜிதவின் சிங்கப்பூர் சிகிற்சைக்கு ஜனாதிபதி நிதியில் இருந்து 100 லட்சம்.. ராஜிதவின் சிங்கப்பூர் சிகிற்சைக்கு ஜனாதிபதி நிதியில் இருந்து 100 லட்சம்.. Reviewed by Madawala News on 8/23/2017 08:50:00 PM Rating: 5