tg travels

குளத்தில் குளித்தவருக்கு 10,000 ரூபா அபராதம்.


திஸாவாவியில் குளித்த குற்றத்துக்காக நீராவியில் வசிக்கும் 35
வயதான நபரொருவருக்கு 10,000 ரூபா அதிகப்பட்ச அபராதத்தை அநுராதபுர பிரதான மாஜிஸ்திரேட் ஹர்ஷன கெசூனவெல நேற்று விதித்தார்.

 அங்கு பிரதான மாஜிஸ்திரேட் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அறிவுரை கூறும் போது, வாவியை அசுத்தப்படுத்துபவர்கள் மீது சட்டம் கடுமையாக நடவடிக்கை எடுக்கு மென்றும் குடிநீர் பெறப்படும் இடங் கள் பாதுகாக்கப்பட வேண்டுமென் றும் கூறினார்.

மேலும் திஸாவாவி தொடர்பாக நீர் வழங்கல் சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 2013, 2014, 2015ம் ஆண்டுகளில் வாவி நீரில் ஈனோலா பக்றீரியா அதி கரித்துள்ளதாகவும் 2015ம் ஆண்டு மிக அதிக வீதத்தில் காணப்பட்ட தாகவும் கூறிய மாஜிஸ்திரேட், அப் பக்றிரியா மனித மலம், சிறுநீர்
மூலமே உருவாகின்றது என்று கூறினார்.

1974 தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சட்டத் தின்படி, அடிப்படை குடிநீருக்கான இடங்களை அசுத்தப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. 1992 திருத்த சட்டத்தின் மூலம் இவ்வா றான குற்றத்துக்கான ஆகக் குறைந்த அபராதத் தொகை 10,000 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.


அந்நபர் குளித்துக் கொண்டு இருக்கும் வேளையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நீர் வழங் கல் சபை, இவ்வழக்கை கடந்த 26ம் திகதி தாக்கல் செய்திருந்தது.

சட்டத்தரணிகளான ஜனாதி பதி சட்டத்தரணி பிரசான்த லால் த அல்விஸ், சட்டத்தரணி ரவீந் திர சட்டத்தரணி பிரதீப் திஸாநா யக்க மற்றும் சட்டத்தரணி சஞ்சய ஆகியோர் முறைப்பாட்டின் சார்பில் ஆஜராகினார்கள்.
குளத்தில் குளித்தவருக்கு 10,000 ரூபா அபராதம். குளத்தில்  குளித்தவருக்கு 10,000 ரூபா அபராதம். Reviewed by Madawala News on 8/31/2017 12:05:00 PM Rating: 5