Ad Space Available here

நீர்க்கட்டணம் இப்போதைக்கு உயர்த்தப்பட மாட்டாது. 12 ரூபாவுக்கு 1000 லீட்டர் தண்ணீர் தருகிறோம்.


ஒரு லீற்றர் தண்ணீர் குறைந்த பட்சம் அறுபது ரூபா வரை விற்பனை செய் யப்பட்டாலும், அரசாங்கம் 1000 லீற்றர் குடிநீரை வீட்டுக்கு கொண்டு வந்து தரு வதற்கு வெறுமனே 12 ரூபா மட்டுமே அறவிடுகின்றது.

வரட்சி நிகழும் இக்கா லத்தில் இப்போதைக்கு நீர்க்கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என நகர திட்ட மிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்திற்கான நீர் வழங்கல் செயற்றிட்டத்தின் நான்காம் கட்ட நீர் வழங்கல் திட்டத்தின் ஆரம்ப வைபவம் அண்மையில் மாத்தறை நூபேவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் மேற்கண் டவாறு கூறினார். தொடர்ந்தும் கூறுகையில் , இன்று நாம் இந்த நீர்வழங்கல் திட்டத்தின் நிர் மாணப்பணிகளை ஆரம்பிக்கும்போது நாட்டின் மற்றுமொரு பகுதியில் கடு மையான வரட்சி நிலவுகின்றது.

எனவே அந்தக் கடும் வரட்சி நிலவும் பகுதி களில் நீருக்கான தட்டுப்பாடு நிலவுகின் றது. இந்தப் பிரதேச மக்களுக்கு உதவு கின்ற வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. சாதாரணமாக மூன்று வருடங்க ளுக்கு ஒருமுறை நீர்க்கட்டணம் மீள மைக்கப்படுவது நடைமுறையிலுள்ள விடயமாகும். எனினும் இறுதியாக நீர்க்கட்டணம் உயர்த்தப்பட்டு நான்கு வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் நீர்க்கட்டணம் அதிகரிக்கப்ப டவில்லை.

 ஆனால் 1000 லீற்றர் சுத்திகரித்து குழாய் மூலம் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அண்ணளவாக 49 ரூபா செலவு செய்கிறது. எனினும் 1000 லீற்றர் அதாவது, ஒரு கனமீற்றர் நீரினை வழங்குவதற்கு பாவனையாளர்களிடமி ருந்து வெறுமனே 12 ரூபா மாத்திரமே நாம் அறவிடுகின்றோம்.

அவசர பயணங்களிலும், தேவைகளின் போதும் புகையிரதத்திலும், பஸ் வண்டிகளிலும் ஒரு லீற்றர் போத்தல் நீரினை குறைந்த பட்சம் அறுபது ரூபா கொடுத்தே பெற்றுக்கொள்கின்றார்கள். எனினும், நாம் நீர்க்கட்டணத்தை ஆறு ரூபாவால் விலை அதிகரிக்க முயற்சிப் பதை எதிர்க்கின்றனர். அதெற்கெதிராக செயற்பாடுகளை முடுக்கி விடுகின்றனர்.

ஆனால் இவ்வாறான திட்டங்களை உருவாக்கி செயற்படுத்த நீர் வழங்கல் சபை, கடன் அடிப்படையிலேயே நிதி யினை பெற்றுக்கொள்கின்றது. அந்தக் கடன்களை திருப்பிச்செலுத்த வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது. எனவே, விலை அதிகரிக்கின்றபோது அதனை அரசியல் கண்ணோட்டத்தில் நோக்காமல் இதன் உண்மைத்தன் மையை விளங்கி செயற்படவேண்டும்.

கோடை காலங்களில் கடல் நீர் நில்வளா கங்கையுடன் கலப்பதை தடுக்கும் வகையில் தடுப்புச் சுவர் அமைக்கப்படவிருக்கிறது.இதன் மூலம் வரட்சியான காலங்களில் நீர்மூலவளத் துடன் உவர்நீர் கலப்பதை முற்றாகத் தடுத்து தூய குடிநீரை வழங்க முடியும், எனவே இவற்றை தடுக்க முயற்சிக்க வேண்டாம் அபிவிருத்திகள் உங்கள் பிர தேசத்திற்கு வரும்போது அதனை அங் கீகரிக்கின்ற மனோநிலை வேண்டும்.


கடந்த அரசும் இதனை முயறசத்த போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்களால் இதனை செய்ய முடிய வில்லை. இப்போது அவர்கள் எதிர்க் கட்சியில் அமர்ந்து கொண்டு இதனை எதிர்க்கின்றனர். இதனை ஆரோக்கிய மான செயலாகக் கருதமுடியாது. மாத்தறை நீர்வழங்கல் திட்டத்தின் நாலாம் கட்ட அபிவிருத்தியின் அவ சியம் தொடர்பாக ஆராயும்போது கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக இங்கு புதிதாக எந்தவொரு குடிநீர் திட் ங்களும் ஆரம்பிக்கப்படவில்லை. இம்மாவட்டத்தின் சனத்தொகை வளர்ச்சி.நகரமயமாக்கல் மற்றும் தெற் கிற்கான அதிவேக பாதை நுழைவாயில் மாத்தறை வரை நீடிப்பு முதலான கார ணங்களால் இந்த மாவட்டத்தின் குடிநீர் தேவை அதிகமாகியுள்ளது. எனவே மாத்தறை மாவட்டத்தின் தற்போதைய நீர்த் தேவை மற்றும் எதிர்காலத்தேவைகளை கருத்திற்கொண்டு அவற்றுக்கு ஏற்றவாறு நீர்வழங்கல் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அபிவிருத்தி செய்யப் பட வேண்டும்.

 தற்போது இம்மாவட்டத்தில் மாத் தறை,வெலிகம,மாலிம்படதெவிநு வர,கோட்டகொட மற்றும் திக்வல்லை முதலான பிரதேசங்களுக்கும் நீர்விநியோக திட்டம் மற்றும் வெலிகம நீர்விதி யோகத் திட்டம் ஆகியன மூலம் நீர் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த இரு திட்டங்களின் மூலமும் நாளொன் றுக்கு 59,300 கன மீற்றர் நீர் சுத்திக ரிக்கப்படுவதோடு அண்ணளவாக 86,000 நீர் இணைப் புக்கள் வழங்கப்  (, 350,000 பாவனையாளர்கள் இதன்மூலம் பய னடைந்து வருகின் றார்கள். இது இந்த மாவட்டத்தின் சனத்தொகையில் 40 சதவீதமாகும். தற்போது செயற் பட்டு வரும் நீர் விநியோகத்திட் டங்களில் உயர்ந்த மற்றும் தாழ்ந்த பிரதேசங்களில் நீரின் அமுக்கம் மாறுபடுவதால், பாவனையாளர்கள் திருப்தியடையும் வகையிலான சேவையை வழங்க முடியாதுள்ளது.

மேலும் நீர்வ ழங்கும் சபை யினால் மாத்தறைப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக நீரை வழங்க முடியாதிருப்ப துடன் விசேடமாக பெப்ரவரி, மார்ச்
மாதங்களில் இந்நிலைமை மேலும் மோசமடையும் நிலை உருவாகுவதால் குறிப்பிட்ட சில மணித்தியாலங்களுக்கு மட்டுமே நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது என்றார்.


இந்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இராஜாங்க அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே, அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதானே மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் பொறியியலாளர் அன்சார் , அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

நீர்க்கட்டணம் இப்போதைக்கு உயர்த்தப்பட மாட்டாது. 12 ரூபாவுக்கு 1000 லீட்டர் தண்ணீர் தருகிறோம். நீர்க்கட்டணம் இப்போதைக்கு உயர்த்தப்பட மாட்டாது. 12 ரூபாவுக்கு 1000 லீட்டர் தண்ணீர் தருகிறோம். Reviewed by Madawala News on 8/11/2017 01:50:00 PM Rating: 5