tg travels

160 தொகுதி அமைப்பாளர்கள் கலந்துகொண்ட முக்கிய கூட்டத்தை ரவி புறக்கணித்தார் !


ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் ரவி கருணாநாயக்க கலந்துகொள்ளவில்லை என தெரியவருகிறது.


ஐக்­கிய தேசியக் கட்­சியின் நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள 160 தேர்தல் தொகுதி அமைப்­பா­ளர்­களும் கட்­சியின் செயற்­பாட்­டா­ளர்­களும் நேற்று கொழும்­புக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.இந்த கூட்டம்  நேற்று பிட்ட கோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நடை­பெற்­றது.

இதன்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதி தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாஸ, கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம், அமைச்­சர்­க­ளான அகிலவிராஜ் காரி­ய­வசம், கயந்த கரு­ணா­தி­லக ஆகியோர் முன்­னிலை வகித்து கூட்­டத்தை நடத்­தினர். இந்த கூட்­டத்தில் வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சமுக­ம­ளிக்­க­வில்லை.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அலரி மாளிகையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் கபீர் ஹஸீம் மற்றும் ரவி கருணாநாயாக்க ஆகியோருக்கு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு ஐக்கிய தேசிய தலைமையால் வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய கூட்டத்தை ரவி கருணானாயக்க புறக்கணிப்பு செய்துள்ளதாக அறிய முடிகிறது.

முறி மோசடி விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் கருத்து முரண்பாடு அதிகரித்துள்ளதாக அறியமுடிகிறது.

160 தொகுதி அமைப்பாளர்கள் கலந்துகொண்ட முக்கிய கூட்டத்தை ரவி புறக்கணித்தார் ! 160 தொகுதி அமைப்பாளர்கள் கலந்துகொண்ட முக்கிய கூட்டத்தை ரவி புறக்கணித்தார் ! Reviewed by Madawala News on 8/04/2017 02:01:00 PM Rating: 5