Kidny

Kidny

பஸ்ஸினுள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த 16 வயது பாடசாலை மாணவிக்கு ஊசி மருந்தை ஏற்றிவிட்டு தப்பியோட முயற்சி.


-தாஹிர் மொஹமட்-
 பதுளை பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து புறப்படவிருந்த பஸ் ஒன்றில் அமர்ந்திருந்த 16 வயது பாடசாலை மாணவி ஒருவருக்கு இனம் தெரியாத
ஊசி மருந்தை ஏற்றி விட்டு தப்பிச் செல்ல முயன்ற இராணுவத்திலிருந்து
விலகிய சிப்பாய் ஒருவரை பொது மக்கள் மடக்கிப் பிடித்து பதுளை பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று பதுளை பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் இடம்பெற் றுள்ளது.

நேற்று நண்பகல் பதுளை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து ஸ்பிரிங்வெளி பெத்தேகமவுக்கு புறப்படவிருந்த பயணிகள் பஸ் ஒன்றிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பஸ் புறப்பட தயாராகவிருந்த போது அந்த பஸ்ஸில் அமர்ந்திருந்த முன்னாள் இராணுவ சிப்பாய் திடீரென ஊசிமருந்து ஒன்றை மாணவி மீது ஏற்றியுள்ளார்.

அதனையடுத்து அவர் கூச்சலிட பக்கத்திலிருந்தவர்கள் குறித்த நபரை மடக்கிப்பி டித்துள்ளனர். இந்த நிலையில் ஊசிமருந்து ஏற்றப்பட்ட மாணவி மயக்கமுற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் பதுளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது தனக்கு 22 வயது எனவும், நான் காலி பிரதேசத்தில் வசிப்பதாகவும் முன்னாள் இராணுவ சிப்பாய் எனவும் தெரிவித்துள் ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பஸ்ஸினுள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த 16 வயது பாடசாலை மாணவிக்கு ஊசி மருந்தை ஏற்றிவிட்டு தப்பியோட முயற்சி. பஸ்ஸினுள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த 16 வயது பாடசாலை மாணவிக்கு ஊசி மருந்தை ஏற்றிவிட்டு தப்பியோட முயற்சி. Reviewed by Madawala News on 8/24/2017 03:17:00 PM Rating: 5