Ad Space avaiable

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் 17 திகதி தீர்மானம் ! 


நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ள உத்தேச நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர் வரை தற்போதைக்கு கைச்சாத்திட்டுள்ளதாக சிரிகொத்த செய்திகள் மடவளை நியுஸுக்கு தெரிவித்தன.


நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு எதிராக அரசாங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கவுள்ளதாக பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது இதனை உறுதிப்படுத்தினார்.


இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 17 ம் திகதி ஐக்கிய தேசிய கட்சி உயர் குழு கூட்டத்தில் எட்டப்படும் என குறித்த உறுப்பினர் குறிப்பிட்டார்.

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் 17 திகதி தீர்மானம் !  நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் 17 திகதி தீர்மானம் !  Reviewed by Madawala News on 8/12/2017 07:35:00 PM Rating: 5