Kidny

Kidny

ரவூப் ஹக்கீம் மீதான குற்றச்சாட்டுகளும் கேள்விகளும் விளக்கங்களும்! பகுதி-1

எஸ். ஹமீத்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!

கடந்த இரண்டொரு தினங்களாக இணையத் தளங்களிலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களைப் பற்றிய தனிநபர் நடத்தை சம்பந்தமான பாரிய குற்றச்சாட்டுகள் பேசுபொருளாகியிருக்கின்றன. ரவூப் ஹக்கீம் அவர்கள் ஒரு சமூகத்தின், அந்த சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியற் கட்சியின் தலைவர் என்பதனால் அவரைப் பற்றி முன்வைக்கப்பட்டிருக்கும் ஒழுக்க ரீதியான குற்றச்சாட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவுள்ளன.

ஒரு சாதாரண குடிமகன் செய்யும் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளுக்கும் சமூக மற்றும் அரசியற் தலைவர்கள் புரிகின்ற ஒழுக்கமற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராக எழுகின்ற விமர்சனங்கள் வித்தியாசமானவையாகவே இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெரும் வல்லரசுகளின் தலைவர்கள் மீது சாட்டப்பட்ட அல்லது எழுப்பப்பட்ட தனிநபர்க் குற்றச்சாட்டுகளினால் அந்தப் பெரும் வல்லரசுகளைத் தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருந்தோர் தமது பதவிகளை இராஜினாமா செய்த வரலாறுகளும் இன்னும் சில நாடுகளில் குற்றம் புரிந்த தலைவர்கள் சிறைத் தண்டனை அனுபவித்த வரலாறுகளும் நமக்கொன்றும் புதியவை அல்ல.

ஆனால், நமது இலங்கை நாட்டில் அரசியல் அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் அடிமை விலங்கொடிக்க அல்லாஹ்வைச் சாட்சியாக வைத்து, அல்குர்ஆனையும் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் யாப்பாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான அரசியற் கட்சியாகிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தலைவரான ரவூப் ஹக்கீம் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அக் கட்சியின் அரசியல் யாப்பைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானவையாகும். மதுவருந்துதல், விபசாரம் என்ற இஸ்லாம் கடுமையாக வெறுத்துத் தடைசெய்திருக்கும் செயல்களைச் செய்வதென்பது கட்சியின் யாப்பாகிய அல்குர்ஆனையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையும் எள்ளி நகையாடுவதற்கு இணையானதாகும். அதுவும் அதனை அந்தக் கட்சியின் தலைவரே செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டானது மிக மிகப் பாரியதாகும்.

இங்கே சில விடயங்களை ஆராய்வதற்கு கடமைப்பட்டுள்ளோம். 1. தலைவர் மேற்படிக் குற்றங்களை உண்மையாகவே செய்தாரா? 2. அப்படி அவர் செய்திருந்தால் அதற்கான சாட்சிகள் யார், ஆதாரங்கள் எவை? 3. தலைவர் மீது குற்றம் சுமத்துபவர் யார்? 4. அவ்வாறு குற்றம் சுமத்துபவரின் மார்க்க ரீதியான, சமூக ரீதியான தகைமைகள் எவை? 5. இந்தக் குற்றங்கள் எக்காலத்தில் நிகழ்ந்தன? 6. முக்காலத்தில் அவை நடந்திருந்தால் ஏன் அவை அக்காலத்தில் வெளிப்படுத்தப்படவில்லை? 7. இந்தக் குற்றங்கள் பற்றித் தலைவர் தன்னிலை விளக்கம் அளிப்பாரா? 8. இந்தக் குற்றங்களைத் தான் செய்யவில்லையென்று தலைவர் கருதுவாராயின், தன்மீது அபாண்டங்களைச் சுமத்தியோருக்கு எதிராக அவர் சட்ட நடவடிக்கைகளை எடுப்பாரா? 9. இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதெனத் தலைவர் ஒப்புக் கொள்வாராயின், அதற்காக அவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்வாரா? 10. இந்த விடயத்தில் இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த மார்க்கத் தலைமையான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலையிட்டு, இரகசியமாகவோ, பரகசியமாகவோ விசாரணைகள் செய்து, இலங்கை முஸ்லிம் மக்களுக்கு ஒரு தெளிவான முடிவைத் தருமா?

(தொடரும்)

ரவூப் ஹக்கீம் மீதான குற்றச்சாட்டுகளும் கேள்விகளும் விளக்கங்களும்! பகுதி-1 ரவூப் ஹக்கீம் மீதான குற்றச்சாட்டுகளும் கேள்விகளும் விளக்கங்களும்! பகுதி-1 Reviewed by Madawala News on 8/23/2017 07:02:00 PM Rating: 5