Ad Space avaiable

இன்று மாலை கஹட்டோவிட்டவில் இடம்பெற்ற சம்பவம் அனைவருக்கும் பாடம்! அவதானம்!!! 2 பேர் பலி!!!


கிரிந்திவெல, வல்கம்முல்ல வீதியில் இன்று மாலை நான்கு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

லொறியொன்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

லொறியின் சாரதி ஓகொடபொல பிரதேசத்தைச் சேர்ந்த (முஸ்லிம்) இளைஞன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கோழிக்கடை வைத்திருக்கும் தனது தந்தையின் சிறிய லொறியொன்றை எடுத்து சென்ற வேளையிலேயே வேக கட்டுப்பாட்டை இழந்து முன்னால் வந்த மோட்டார் வண்டியின் மீது லொறி மோதியுள்ளது!

வாகனத்தை ஓட்டி சென்றவர் முஸ்லிம் என்பதாலும் உயிரிழந்த இருவரும் பெரும்பான்மை இனத்தவர் என்பதாலும் விபத்து நடந்த இடத்தில் சிறு பதற்றம் நிலவியது!

குறித்த பகுதிக்கு பொலிசார் விரைந்து வந்ததையடுத்து பெரும் பதற்றம் தணிக்கப்பட்டதுடன் வாகனமும் எரியூட்டப்படாமல் பாதுகாக்கப்பட்டது!

லொறியை ஓட்டி சென்ற இளைஞனை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முஸ்லிம் இளைஞனிடம் வாகன அனுமதி பத்திரமும் இல்லையென தெரியவருகிறது!

பிள்ளகளை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் தற்காலத்தில் மிகுந்த  அவதானத்துடன் நடந்துகொள்ளல் வேண்டும்!  தம் பிள்ளைகள் வாகனம் செலுத்த சட்ட ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தகுதியானவரா என்பதை உறுதி செய்ய வேண்டும் ( இளைஞனின் தந்தையும் கைதாகி சற்றுமுன் கைதாகி உள்ளதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன)

Share பண்ணவும்!

-அல்மஷூறா / மடவளை நியூஸ்


 

 
இன்று மாலை கஹட்டோவிட்டவில் இடம்பெற்ற சம்பவம் அனைவருக்கும் பாடம்! அவதானம்!!! 2 பேர் பலி!!! இன்று மாலை கஹட்டோவிட்டவில் இடம்பெற்ற  சம்பவம் அனைவருக்கும் பாடம்! அவதானம்!!! 2 பேர் பலி!!! Reviewed by Madawala News on 8/01/2017 08:39:00 PM Rating: 5