tg travels

மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி 2017



உக்குவளை பரகஹவெல கோல்ட் மூன் விளையாட்டு கழகம் ஏற்பாட்டில் 2017.08.05/06 ஆகிய இரு தினங்களும் பரகஹவெல ஹாசிம் விளையாட்டரங்கில் நடத்தப்படுகிறது.

 8 அணிகள் கலந்து கொள்ளும் இவ்உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வில் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.விசேட அதிதிகளாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு..A.A.ரஞ்ஜித் அலுவிஹார திரு A.A.வசந்த அலுவிஹார மற்றும் திருமதி.ரோஹினி கவிரத்ன ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக மத்திய மாகாண உறுப்பினர்கள் அல்ஹாஜ் இப்ராஹிம் அல்ஹாஜ். முத்தலிப் மாத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.தொடர்ந்து இரு நாட்களும் பகல் இரவு ஆட்டமாக நடைபெற ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இச்சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் Champion அணிக்கு ரூபா 150,000.00 பணப் பரிசுடன் வெற்றிக்கிண்ணமும் இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூபா 100,000.00 பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்படவுள்ளது.

-ஸாதிகீன் உக்குவளை-

மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி 2017 மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி 2017 Reviewed by Madawala News on 8/05/2017 08:03:00 PM Rating: 5