Kidny

Kidny

2019 உலக கிண்ணத்தில் இலங்கைக்கு பங்குபற்ற கிடைக்குமா? இறுதி வாய்ப்பு இதுதான்.


- Hassim Mohamed Naleem -

இலங்கைக்கான சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தம்புள்ள மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

3போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்துள்ள இலங்கை அணி, இந்த ஒருநாள் தொடரிலாவது தமது திறமையை காட்டும் என்று இலங்கை ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்,

அதையும்தாண்டி இலங்கை அணி, 2019 உலக கிண்ண போட்டிகளுக்கு நேரடி தகுதியைப் பெறுவதற்கு இந்திய அணியுடனான ஒருநாள் தொடர் முக்கியமாக அமையவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளின் பிரகாரம் செப்டெம்பர் 30 திகதிவரையில் தரநிலையில் முதல் 7 இடங்களை பிடித்துள்ள அணியும், போட்டியை நடத்துகின்ற அணியும் உலக கிண்ணத்துக்கு நேரடி தகுதியை பெற்றுக்கொள்ளும்.

ஆகமொத்தத்தில் போட்டியை நடத்தும் நாடு இங்கிலாந்து தரநிலையில் முதல் 7 இடங்களுக்குள் இல்லாவிட்டாலும் , விதிமுறைகளின் பிரகாரம் இங்கிலாந்துக்கு நேரடி தகுதி கிடைத்துவிடும்.(இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 4 வது இடத்தில உள்ளது )

முதல் 7 அணிகளும் இப்போதுவரையிலும் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டுள்ள நிலையில் அந்த இறுதி 8 வது இடத்துக்கு கடுமையான போட்டி இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு காணப்படுகின்றது.

இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் குறைந்தது 2 ஆட்டங்களையாவது இலங்கை அணி வெற்றிகொண்டால் உலக கிண்ணத்தின் நேரடி தகுதிக்கு போதுமானதாக இருக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

இலங்கை அணி 88 புள்ளிங்களுடன் 8 வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகளை அணி 78 புள்ளிகளுடன் 9 வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


2019 உலக கிண்ணத்தில் இலங்கைக்கு பங்குபற்ற கிடைக்குமா? இறுதி வாய்ப்பு இதுதான். 2019 உலக கிண்ணத்தில் இலங்கைக்கு பங்குபற்ற கிடைக்குமா? இறுதி வாய்ப்பு இதுதான். Reviewed by Madawala News on 8/19/2017 11:20:00 AM Rating: 5