Kidny

Kidny

2020ஆம் ஆண்டளவில் நாடு பட்டுள்ள கடனை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து, 2025 ஆம் ஆண்டு கடன் தொல்லையில் இருந்து முழுதும் விடுபடுவோம்.

கடந்த காலங்களில் இலங்கைப் பெற்றுக்கொண்ட கடன்களை 2020ஆம் ஆண்டளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுடன் 2025ஆம் ஆண்டளவில் கடன் தொல்லையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்குரிய ஒரு சூழலை உருவாக்குவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (2) தெரிவித்தார்.


அலரி மாளிகையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர் அபிவிருத்திக்கான  வியாபாரக் கொடிகள் அணியும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதைத் தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இளைஞர் கொடிதினத்தை நினைவு கூரும் நிகழ்வு, 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நாங்கள் இந்தக் கொடிதினத்தை வெற்றிகரமான முறையில் கொண்டாடினோம். இதன் வாயிலாக பணத்தைப் பெற்றுக்கொண்டோம். 


இதேபோல இந்த ஆண்டும் மக்கள் எங்களுக்கு இதை வெற்றிக்கரமான முறையில் கொண்டு செல்வதற்கு உதவுவார்கள் என நினைக்கின்றேன். மக்களால் அர்ப்பணிப்புடன் வழங்கப்படும் இந்தப் பணத்தை மட்டுமன்றி, நாங்களும் இதற்காக அதிகமாக நிதியை ஒதுக்குவோம்.


மற்றும் பல்கலைக்கழகங்களின் மூலம் வெளியிடப்படும் நூல்களுக்காக நூறு மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம்


ஊருக்கு ஒரு கோடி என்ற அபிவிருத்தி வேலைத் திட்டத்தையும் நாங்கள் விரைவில் ஆரம்பிப்போம். இவைகளை நாம் ஏன் செய்கின்றோம் என்றால் எதிர்காலப் பொறுப்புகளை பொறுப்பேற்கக் கூடிய வகையில்  இளைஞர்களின் எதிர்காலத்தைப் பலப்படுத்த வேண்டும். எங்களை விடவும் நல்ல எதிர்க்காலத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தைத் தான் தற்போது ஆரம்பித்துள்ளோம்.


சுதந்திரமாக வாழக்கூடிய சமுதாயம் தற்போது உருவாகியுள்ளது. யாராக இருந்தாலும் அரசாங்கத்தின் மீதான குறைகளை பயம், சந்தேகமின்றி சுட்டிக்காட்ட முடியும். தகவல்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய உரிமை, நாடாளுமன்றத்துக்கு சட்ட அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்கள் தற்போது ​பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்துக்கும் நாங்களும் உதவிகளை வழங்கியுள்ளோம்.


மேலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உய​ர்த்துவதற்கு ஏற்கெனவே  வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளைத் தொடங்கி அதைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.  

நாட்டில் கடன்தொல்லை பெரியதொரு பிரச்சினையாக இருந்தது. இந்தக் கடனை இளைஞர் சமுதாயமும் சுமப்பதற்கான நிலைமை தோன்றும் என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்தது.


ஆனால், 2020ஆம் ஆண்டளவில் இந்தக் கடனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளதுடன், 2025ஆம் ஆண்டளவில் இந்தக் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவதற்குரிய ஒரு சூழலை நாங்கள் ஏற்படுத்துவோம்.


மேலும் பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஹம்பாந்தோட்டை, கொழும்பு, களுத்துறை, காலி, கண்டி, குருநாகல்,​ ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பிரயாணிகளுக்கான வேலைத்திட்டம், தொழிற்றுறைகள் போன்ற பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதம​ர் ரணில் விக்கிரமசிங்க இதன்போதுத் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டளவில் நாடு பட்டுள்ள கடனை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து, 2025 ஆம் ஆண்டு கடன் தொல்லையில் இருந்து முழுதும் விடுபடுவோம். 2020ஆம் ஆண்டளவில் நாடு பட்டுள்ள கடனை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து, 2025 ஆம் ஆண்டு கடன் தொல்லையில் இருந்து முழுதும் விடுபடுவோம். Reviewed by Madawala News on 8/02/2017 03:58:00 PM Rating: 5