Kidny

Kidny

2020 இல் ஆட்சியை கைப்பற்ற JVP அமைக்கும் புதிய அரசியல் வியூகம் இது...


மக்கள் விடுதலை முன்னணி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பொதுமக்களின் பலத்தில் உருவாக்கப்பட்ட விரிவான கூட்டணி ஒன்றை உருவாக்கி, பொது சின்னத்தின் கீழ் போட்டியிடும் என அதன் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் மக்கள் விடுதலை முன்னணியின் சின்னமான மணி சின்னத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது.

ஒருவருக்கு ஒருவர் குற்றம் சுமத்திக்கொள்ளும் நாடகமாக அரசியல் மாறியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி மீறப்பட்டுள்ளதன் காரணமாக மக்கள் அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் தனது தோல்வியான பொருளாதார கொள்கைகளுடன் முன்னோக்கி செல்ல முடியாது.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்திற்கு எதிராக விரிவான மக்கள் கூட்டணி உருவாக்கப்படும் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
2020 இல் ஆட்சியை கைப்பற்ற JVP அமைக்கும் புதிய அரசியல் வியூகம் இது... 2020 இல் ஆட்சியை கைப்பற்ற  JVP அமைக்கும்  புதிய அரசியல் வியூகம் இது... Reviewed by Madawala News on 8/19/2017 04:21:00 PM Rating: 5