tg travels

2025 இல் அனைவருக்கும் வீடு..


2025ம் ஆண்டளவில் நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் வீடொன்றைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


அலரிமாளிகையில் நடைபெற்ற அனைவருக்கும் நிழல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 1100 பயனாளிகளுக்கு வீட்டுக்கடன்களை வழங்கும் நிகழ்வில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 

பிரதமர் மேலும் உரையாற்றுகையில்,

தற்போதைய அரசாங்கம் நிர்வாகத்தை பொறுப்பெடுத்த வேளையில், நாட்டில் வீடில்லாதவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய திட்டம் இருக்கவில்லை என்றும் பிரதமர் கூறினார். இருப்பினும், தற்போதைய அரசாங்கத்திற்கு உரிய திட்டத்தை வகுப்பதற்கு முடிந்ததுள்ளது.

 

பொருட்களின் விலையை குறைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்து, மக்களின் வருமானத்தை உயர்த்திய ஒரே அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கமாகும் .

 

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, நாட்டில் 25 இலட்சம் பேருக்கு வீடுகள் இல்லை என்பது அடையாளம் காணப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

2025 இல் அனைவருக்கும் வீடு.. 2025 இல் அனைவருக்கும் வீடு.. Reviewed by Madawala News on 8/30/2017 03:03:00 PM Rating: 5