Kidny

Kidny

மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி, அன்வர் முஹமட் (வயது 24) உயிரிழப்பு. பாசீக் (வயது 22) படுகாயம்.

குச்சவெளி பகுதியில் இருந்து புடவைக்கட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் திருகோணமலை - புல்மோட்டை வீதியில், குச்சவெளி பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள மின் கம்பத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய நபர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.



இவ்விபத்து, நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை 6 மணியளவில்  இடம்பெற்ற இவ்விபத்தில், அன்வர் முஹமட் (வயது 24) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் முஹமட் பாசீக் (வயது 22) படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்த நபரின் சடலம், குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில், திருகோணமலை பொதுவைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


இச்சம்பவம் தொடர்பில், குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி, அன்வர் முஹமட் (வயது 24) உயிரிழப்பு. பாசீக் (வயது 22) படுகாயம். மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி,  அன்வர் முஹமட் (வயது 24) உயிரிழப்பு. பாசீக் (வயது 22) படுகாயம். Reviewed by Madawala News on 8/12/2017 11:43:00 AM Rating: 5