Kidny

Kidny

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான புதிய திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில்..


உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான புதிய திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தாமதமடைகின்றமை தொடர்பில் ஜனாதிபதிக்கோ, அரசாங்கத்திற்கோ குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் எந்த நியாயமும் கிடையாது. 2012ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் 55 கோளாறுகள் காணப்பட்டதாக சுதந்திர கட்சி தரப்பு தெரிவிக்கின்றன.

எமக்கு கிடைத்துள்ள நம்பகமான தகவலின் படி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான புதிய திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ள சுதந்திர கட்சி மத்திய குழு கூட்டத்தில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான புதிய திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் நிலையில் அந்த சட்டமூலம் நிறைவேற்றப் பட்டால் நவம்பர் மாதம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான புதிய திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில்.. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான புதிய திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில்.. Reviewed by Madawala News on 8/16/2017 08:30:00 AM Rating: 5