tg travels

முஸ்லிம்களுக்கு சொந்தமான 32 ஏக்கர் காணியை துண்டாடி குடிசைகள் அமைத்தனர் பெரும்பான்மையினர்...


ARA FAREEL 

மாத்­தளை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வாரி­ய­பொல, எல்­வல பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான 32 ஏக்கர் பரப்­ப­ள­வி­லான தோட்­ட­மொன்றில் பலாத்­கா­ர­மாக பெரும்­பான்மை சமூ­கத்­தினர் உட்­பி­ர­வே­சித்து காணி­யினை துண்­டாடி பங்­கிட்டு குடி­சைகள் அமைத்துக் கொண்­டுள்­ளனர்.


32 ஏக்கர் 30 பேர்ச்­சு­களைக் கொண்ட இறப்பர் தோட்டம் அக்­கு­ற­னையைச் சேர்ந்த எம்.ஏ.எம். ரிஸ்வான் உட்­பட அவ­ரது உற­வி­னர்­க­ளுக்கு சொந்­த­மா­ன­தா­கவும் ஆரம்­பத்தில் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி தோட்­டத்­துக்குள் அத்­து­மீறி பலாத்­கா­ர­மாக உட்­பி­ர­வே­சித்த பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த மூவர் காணியை உரிமை கொண்­டா­டி­னார்கள். பின்பு இக்­காணி அர­சாங்­கத்­துக்குச் சொந்­த­மா­னது என செய்­தி­களைப் பரப்­பி­ய­தை­ய­டுத்து தற்­போது சுமார் 70 பேர் வரையில் காணியை சொந்தம் கொண்­டாடி வரு­கி­றார்கள் என தோட்­டத்தின் உரி­மை­யாளர் ரிஸ்வான் தெரி­வித்தார்.


காணியை துண்­டாடி வேலி­ய­மைத்து சில சிறிய குடி­சை­க­ளையும் அமைத்துக் கொண்­டுள்­ளார்கள். இத்­தோட்­டத்தில் உரி­மை­யா­ள­ருக்கு சொந்­த­மான எவ்­வித கட்­டி­டங்­களும் இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்தத் தோட்­டத்தை ஒரு பகு­தி­நேர காவ­லா­ளியே கண்­கா­ணித்து வந்­துள்ளார். பெரும்­பான்மை இனத்­த­வர்கள் காவ­லாளி தோட்­டத்­துக்குள் பிர­வே­சிப்­ப­தையும் தடை செய்­துள்­ளனர்.


பெரும்­பான்மை இனத்­த­வர்­களின் அத்­து­மீ­றிய பிர­வே­சத்தால் பாதிக்­கப்­பட்ட மக்கள் மாத்­தளை பொலிஸில் முறை­யிட்ட போதும் உரிய நட­வ­டிக்­கைகள் இது­வரை எடுக்­கப்­ப­ட­வில்லை என உரி­மை­யாளர் தெரி­விக்­கிறார்.


உரி­மை­யா­ளரால் மாத்­தளை மாவட்ட நீதி­மன்றில் வழக்­கொன்றும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. வழக்கு விசா­ரணை எதிர்­வரும் 4 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. 1972 ஆம் ஆண்டு அப்­போ­தைய அர­சாங்கம் ஒருவர் 50 ஏக்­க­ருக்கு அதி­க­மாக காணி­களை சொந்­த­மாக வைத்­தி­ருக்க முடி­யாது என்ற சட்­டத்தின் கீழ் LRC யினால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணியின் ஒரு பகுதியான இந்தத் தோட்டம் 1992 ஆம் ஆண்டு உரிமையாளருக்கு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இறப்பர் தோட்டமான இந்தக் காணியின் உறுதிகள் உரிமையாளரிடம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களுக்கு சொந்தமான 32 ஏக்கர் காணியை துண்டாடி குடிசைகள் அமைத்தனர் பெரும்பான்மையினர்... முஸ்லிம்களுக்கு சொந்தமான 32 ஏக்கர் காணியை துண்டாடி குடிசைகள் அமைத்தனர் பெரும்பான்மையினர்... Reviewed by Madawala News on 8/02/2017 08:21:00 PM Rating: 5