tg travels

நேற்று 32 ஹஜ் யாத்திரிகர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏமாற்றப்பட்டு முகவர் நிலைய அதிகாரியுடன் கைகலப்பான சம்பவத்தின் விபரம் இதுதான்.



புனித ஹஜ் கடமையை நிறை வேற்றுவதற்காக மக்கா செல்வதற்கு விமானநிலையம் வந்த 32ஹஜ் யாத் திரிகர்கள் நேற்று ஏமாற்றப்பட்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட முகவர்நிலையமொன்றே இவர்களை ஏமாற்றிய தாக 32 யாத்திரிகர்களும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக் களத்தில் நேற்று முறையிட்டனர்.


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய் யப்பட்ட முகவர்நிலையமொன்றின் மூலம் செல்லவிருந்த மேற்படி 32 ஹாஜிகளுக்கும் விசா வழங்கப்பட்ட போதிலும் குறித்த நிறுவனம் இவர் களுக்கான விமான சீட்டை வழங்காததால் இவர்கள் நேற்று செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


குறித்த முகவர் நிலையத்தில் ஒருவருக்கு தலா நான்கரை ( 4 - 1/2)
இலட்சம் ரூபா முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.

இந்த யாத்திரிகர்களுக்கு நேற்று 28ம் திகதி விமான நிலையத் திற்கு வருமாறு கூறி அங்கு வைத்து விமானச் சீட்டையும் கடவுச் சீட்டை யும் தருவதாக வாக்குறுதியளிக்கப் பட்டுள்ளது.

நேற்று விமான நிலை யத்தில் நீண்டநேரம் காத்திருந்த இவர்களுக்கு செல்ல முடியாதென்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.


குறித்த 32 யாத்திரிகர்களும் கொழும்பிலுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத் திற்கு கவலையுடனும், கோபத்துட னும் வருகை தந்து விடயத்தை தெரிவித்ததுடன் அங்கு முகவர் நிலைய பொறுப்பாளர்களுக்கும், யாத்திரி கர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் முகவர் நிலைய உரிமையாளரின் சகோதரர் ஒருவர் தாக்கப்பட்டார்.

இதன்போது திணைக்களத்தின் பணிகளுக்கும் சில மணி நேரங்கள் இடையூறு ஏற்பட்டது. திணைக்கள ஊழியர்கள் மற்றும் பொலிஸாரின் தலையீட்டினால் நிலைமை சுமுகம டைந்தது.

இதன்போது தமது முழுப் பணத்தையும் உடன் வழங்குமாறு வற்புறுத்தியதனால் முகவர் நிலைய பொறுப்பாளரால் ஒருசில யாத்திரிகர் களுக்கு காசோலைகள் மூலம் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

இவ் வாறான முகவர் நிலையங்களுக்கு திணைக்களம் இனிமேல் அனுமதி வழங்கக் கூடாதென்றும், இதுவிட யத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிலர் கோஷமிட் டனர்.
நேற்று 32 ஹஜ் யாத்திரிகர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏமாற்றப்பட்டு முகவர் நிலைய அதிகாரியுடன் கைகலப்பான சம்பவத்தின் விபரம் இதுதான். நேற்று 32 ஹஜ் யாத்திரிகர்கள், கட்டுநாயக்க  விமான நிலையத்தில் ஏமாற்றப்பட்டு முகவர் நிலைய அதிகாரியுடன் கைகலப்பான சம்பவத்தின் விபரம் இதுதான். Reviewed by Madawala News on 8/29/2017 10:27:00 AM Rating: 5