Ad Space avaiable

பயணிகள் போக்குவரத்திற்காக தற்பொழுது பயன்படுத்தப்படும் பாரிய விமானமான ஏ380 ரக விமானம் இலங்கையில் ..


பயணிகள் போக்குவரத்திற்காக தற்பொழுது பயன்படுத்தப்படும் பாரிய விமானமான ஏ380 ரக விமானமானது இலங்கை வரலாற்றில் முதன்முறையாக திட்டமிட்ட பயண சேவைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து இன்று தரையிறங்கவுள்ளது.


எமிரேட் விமானசேவைக்குட்பட்ட இந்த விமானம் டுபாயிலிருந்து இன்று மாலை 4.10க்கு கொழும்பை வந்தடையவுள்ளது.

எரிபொருளை நிரப்புவதற்கும் அவசர தேவைகளுக்காக ஏ380 ரக விமானம் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடுபாதை நவீன மயப்படுத்தப்பட்ட பின்னர் இவ்வாறான பாரிய விமானங்களுக்கான வசதி செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் ஏ380 ரக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை கேந்திரமாக கொண்டு சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பயணிகள் போக்குவரத்திற்காக தற்பொழுது பயன்படுத்தப்படும் பாரிய விமானமான ஏ380 ரக விமானம் இலங்கையில் .. பயணிகள் போக்குவரத்திற்காக தற்பொழுது பயன்படுத்தப்படும் பாரிய விமானமான ஏ380 ரக விமானம் இலங்கையில் .. Reviewed by Madawala News on 8/14/2017 03:02:00 PM Rating: 5